சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு நாடு திரும்பும் இந்திய அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? :
இந்த டெஸ்ட் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்குகிறது.
இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை செப்டம்பர் 24-ஆம் தேதி பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் துபாயில் இருப்பதினால் நாளை அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஆன்லைன் மூலமாக அவர்கள் இருவரிடமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இந்திய அணியினை தேர்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி நாளை செப்டம்பர் 24-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற பல்வேறு வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்றும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இடையே அணியில் இடம் பிடிக்க போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அஷ்வின் அடுத்ததாக விளையாட இருக்கும் 2 தொடர்கள் – விவரம் இதோ
குறிப்பாக கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு இடையேயான தேர்வில் கடும் மோதல் இருக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேல் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



