பாகிஸ்தானின் மோசமான நடத்தை வலையில் விழாமல்.. இந்தியாவை ஜெய்க்க வெச்சுதுக்கு பாராட்டுறேன்.. கோச் ரியான்

Ryan Doeschate
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது. அடுத்து நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா தயாராகியுள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது.

அப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் வகையிலும் நடந்து கொண்டார்கள். குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு டாஸ் வீசிய போதும் போட்டி முடிந்த பின்பும் இந்திய அணியினர் கை குலுக்கவில்லை.

- Advertisement -

பாகிஸ்தானின் மோசமான நடத்தை:

அதற்காக சூப்பர் 4 போட்டியில் சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் இந்தியாவை துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை வைத்து கொண்டாடி கிண்டலடித்தார். அதே போல ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை சைகையாக செய்து காட்டிய ஹாரிஸ் ரவூப் இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் கிண்டலடித்தார். மேலும் அதிரடியாக விளையாடிய அபிஷேக் – கில் ஆகியோரிடம் அப்ரிடி, ரவூப் ஆகியோர் வாய்மொழியாக வம்பிழுத்தனர்.

அதற்கு அபிஷேக் – சுப்மன் கில் வாயாலும் பேட்டாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் கடந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் நடத்தை வம்பிழுக்கும் வகையில் மோசமாக இருந்ததாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் அந்த மோசமான நடத்தை வலையில் விழாமல் இந்தியாவை வெற்றி பெற வைத்த அபிஷேக் – கில் உள்ளிட்ட வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விழாத இந்தியா:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்கள் வீரர்கள் மீது குவிக்கப்பட்ட அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்த மிகவும் கடினமாக இருந்தது என்று சொல்வேன். ரவூப் செய்த சில விஷயங்களை நானும் பார்த்தேன். அது உங்களுக்கும் தெரியும். அது எங்களுடைய கவலையல்ல. ஆனால் அந்த அழுத்தங்களை சுமந்து கொண்டு வெற்றியில் பங்காற்றியதற்காக எங்களுடைய வீரர்கள் மீது நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்”

இதையும் படிங்க: 5 ஃபோர்ஸ் 6 சிக்ஸ் 70 ரன்ஸ்.. உன்முக்தை முந்திய சூர்யவன்ஷி புதிய உலக சாதனை.. ஆஸி மண்ணில் அபார ஆட்டம்

“ஏனெனில் அந்த சமயத்தில் நாங்களும் எங்களுடைய மூளையை இழந்து அப்படி கொண்டாடுவது எளிது. மேலும் பாகிஸ்தான் பவுலர்கள் எங்களிடம் சில வார்த்தைகளைச் சொன்னார்கள். ஆனால் அங்கே எங்களுடைய வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி நன்றாக விளையாடி போட்டியை வென்று கொடுத்து வேலையை முடித்தனர்” என்று கூறினார்.

Advertisement