5 ஃபோர்ஸ் 6 சிக்ஸ் 70 ரன்ஸ்.. உன்முக்தை முந்திய சூர்யவன்ஷி புதிய உலக சாதனை.. ஆஸி மண்ணில் அபார ஆட்டம்

Vaibhav Suryavanshi
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்டர்-19 இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள இயன் ஹீலி மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

சூர்யவன்சி அபாரம்:

அவருடன் ஜோடி சேர்ந்த விகான் மல்கோத்ரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அந்த வகையில் 19 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய அவர்கள் 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு அபார துவக்கத்தைக் கொடுத்தனர். அதில் நாலாபுறமும் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்த சூரியவன்சி 5 பவுண்டரி 6 சிக்சர்களை பறக்க விட்டு 70 (68) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இதையும் சேர்த்து அண்டர் 19 ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதுவரை 10 அண்டர்-19 போட்டிகளில் விளையாடி 41* சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் முன்னாள் இந்திய கேப்டன் உன்முக்த் சந்த் சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதே சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் 30 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

புதிய உலக சாதனை:

அந்தப் பட்டியல்:
1. வைபவ் சூர்யவன்சி (இந்தியா): 41*
2. உன்முக்த் சந்த் (இந்தியா): 38
3. ஜவாத் அப்ரார் (வங்கதேசம்): 35
4. ஷாசைப் கான் (பாகிஸ்தான்): 31
5. யசஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா): 30
6. தௌஹீத் ஹிர்டாய் (வங்கதேசம்): 30

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 4 சுற்றுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் சேர்ந்து விளையாடிய மல்கோத்ரா தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 70 (74) ரன்கள் குவித்து. மிடில் ஆர்டரில் வேதாந் த்ரிவேதி 2, ராகுல் குமார் 2, கனிஷ்க் சௌஹான் 12 ரன்களில் அவுட்டானாலும் அபிஞான் குண்டு அபாரமாக விளையாடி 5 பௌண்டரி 2 சிக்சருடன் 71 (64) ரன்கள் குவித்தார். இறுதியில் 49.4 ஓவரில் இந்தியா அண்டர்-19 அணி 300 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் யாஷ் தேஷ்முக் 2, வில் பைரோம் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement