சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளை எளிதாக வீழ்த்திய இந்திய அணியானது சூப்பர் போர் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது.
வங்கதேச அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :
அதனை தொடர்ந்து சூப்பர் ஃபோர் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு அடுத்ததாக ஒரு மட்டுமே போட்டி எஞ்சியிருக்கிறது. இதன் காரணமாக ஒரு சில வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி இன்னும் இந்த தொடரில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாட இருப்பதினால் தொடர்ச்சியாக ஒரே அணி தான் விளையாடும் என்றும் தெரிகிறது.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் தொடர்ச்சியாக வீரர்கள் விளையாடி வந்தால் தான் நல்ல நம்பிக்கை இருக்கும் என்பதாலும் அணிமாற்றம் நிகழாது என்று கூறப்படுகிறது. அதோடு நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணியே கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். வங்கதேச அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தமிழக வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட வாய்ப்பு – முடிவு என்ன?
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்ரவர்த்தி.



