வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தமிழக வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட வாய்ப்பு – முடிவு என்ன?

Jagadeesan
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் இந்திய அணியானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

டெஸ்ட் அணியில் மீண்டும் ஜெகதீசன் இடம்பிடிக்க வாய்ப்பு :

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று செப்டம்பர் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதன் காரணமாக அந்த தொடரில் இடம் பிடித்த பல வீரர்கள் இந்த தொடரிலும் இடம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் சில மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேல் விளையாட உள்ளார். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரிஷப் பண்ட் காயமடைந்தார். அவருக்கு ஏற்பட்ட அந்த காயம் இன்னும் முழுவதுமாக குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பிடிக்க மாட்டார் என்று தெரிகிறது. அதனால் முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் தொடர்வார்.

இதையும் படிங்க : இனிமே எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம்.. பி.சி.சி.ஐ க்கு கடிதம் அனுப்பிய ஷ்ரேயாஸ் ஐயர் – என்ன காரணம்?

அதேவேளையில் கூடுதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து தொடரின் கடைசி ஆட்டத்திலும் அவர் மாற்று வீரராக இந்திய அணியில் இணைந்திருந்ததால் நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஜெகதீசன் இருப்பார் என்பது உறுதி.

Advertisement