யுவ்ராஜ் சிங் போன்றே 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்கவேண்டும். அதுவே எனது ஆசை – ஜிம்பாப்வே வீரர் விருப்பம்

Zimbabwe
- Advertisement -

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்திய அணி ஆசியக்கோப்பை தொடரில் இம்மாத இறுதியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக முதன்மை வீரர்களை தவிர்த்து கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட மற்றொரு அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

அதன்படி ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும், பயிற்சியாளராக லட்சுமணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

அதேவேளையில் ஜிம்பாப்வே அணி சமீப காலமாகவே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் வெற்றி, அதுமட்டும் இன்றி வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் என அடுத்தடுத்து வெற்றிகளோடு சிறப்பாக விளையாடி வருகிறது.

ryan

டி 20 கிரிக்கெட்டில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் ரயான் பர்ல் திகழ்கிறார். அவரது அட்டகாசமான ஆட்டம் சமீப காலமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியின்போது வங்கதேச வீரர் வீசிய 15-வது ஓவரில் 5 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என ஒரே ஒரு ஓவரில் 34 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவருடைய ஆசை குறித்து பேசியிருந்த ரியான் பர்ல் யுவராஜ் சிங் போன்று ஒரே ஓவரில் 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் ஆறு சிக்சர் அடிக்க வேண்டும் தான் நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. யுவ்ராஜ் சிங் போன்று நிச்சயம் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் அதுவே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 10 அணிகள் – சிறப்பு பதிவு

28 வயதான இளம்வீரரான ரியான் பர்ல் ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி மூன்று டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement