ஜிம்பாப்வே வீரர் வெளியிட்ட உருக்கமான பதிவு. சர்வதேச வீரர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா ? – விவரம் இதோ

Ryan-burl
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டு என்றாலே தற்போது கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஒரு இடமாக மாறி உள்ளது. இதனால் இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெறும் சில வீரர்கள் ஓரிரு ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாறி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் வீரர்களுக்கு சம்பளம் அதிகம் அது மட்டுமின்றி ஐபிஎல் தொடர்களின் வரும் கிடைக்கும் வருமானமும் மிகவும் அதிகம் ஆனால் இப்படி எந்த ஊதியமும் இல்லாமல் அடிப்படை வருமானம் கூட இல்லாத சில கிரிக்கெட் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ryan

- Advertisement -

அதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஊதியம் என்பது மிகவும் குறைவே என்று கூறலாம். 1990-2000 ஆவது காலகட்டங்களில் ஒரு நல்ல அணியாக பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே அணி அதன் பிறகு தொடர்ச்சியாக கடை நிலையிலேயே உள்ளதால் அந்த அணிக்கு ஸ்பான்சர்கள் ஏதும் கிடைக்காமல் வீரர்களுக்கு ஊதியமும் குறைவாக கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வீரரான ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பார்ப்பவர்களை மனம் உருக வைத்துள்ளது. ஏனெனில் ஒரு தொடரின் போது விளையாடிய ஷூவை மீண்டும் அவர் பசை போட்டு ஒட்டி வைக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி எங்களுக்கு ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவை நாங்கள் பசை போட்டு ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை செய்து வெளியிட்டுள்ளார்.

ryan 1

இந்த புகைப்படத்தை பார்க்கையில் ஒவ்வொரு தொடருக்கு பின்னர் ஷூவை மாற்ற கூட முடியாத அளவிற்கு அவர்களது நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைவு என்று பார்க்கத் தோன்றுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்கள் கோடிகளில் புரள இப்படியும் சில அணிகளின் வீரர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது பார்ப்பதற்கு சற்று வருத்தமான விடயம் தான்.

Advertisement