“சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் மத்தியில் நான்” தனது ஆசையை பகிர்ந்த – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

சென்னை அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஹாட்ரிக் அரை சதத்தை அடித்து சென்னை அணியின் நிரந்தர துவக்க வீரராக தனது இடத்தை பதிவு செய்தார். அதன் பிறகு 2021-ஆம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய போது அந்த சீசனில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

Ruturaj gaikwad 73

- Advertisement -

அதன் பின்னர் சென்னை அணியின் முக்கிய வீரராக உருமாறிய ருதுராஜ் கெய்க்வாட் 2022-ஆம் ஆண்டில் சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரராக தனது இடத்தினை உறுதி செய்தார். அதன் பின்னர் இந்திய அணிக்காகவும் அறிமுகமாக ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து வெளியேறி இருந்தாலும் இந்திய ஏ அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தினார்.

அதன்படி நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்து தனது நெகிழ்ச்சியான கருத்தினை பகிர்ந்து கொண்ட அவர் கூறுகையில் : நான் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் ஒரே விடயம்தான்.

Ruturaj

நான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் ஒரு நொடியை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். ஏனெனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட நுழையும்போது மக்கள் கொடுக்கும் ஆதரவும், ஆரவாரமும் என்னை நெகிழ வைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் நான் சென்னை அணிக்காக சேப்பாக்கத்தில் விளையாட ஆசைப்படுகிறேன். சென்னை அணியுடன் தான் என்னுடைய பயணம் துவங்கியது. சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகுதான் நான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். என்னுடைய கரியரின் ஆரம்பமே சிஎஸ்கே என்பதனால் எனக்கு இங்கு அனைத்துமே கிடைத்தது. சென்னை மக்கள் முன்பு மீண்டும் விளையாடுவதை எதிர்நோக்கி காத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் பரிசை மிஞ்சியதா டி20 உ.கோ தொகை – உலகின் டாப் டி20 தொடர்களின் பரிசுத்தொகை பட்டியல் இதோ

இதுவரை ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 1207 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் சச்சின் உடன் சமன் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement