ஐபிஎல் பரிசை மிஞ்சியதா டி20 உ.கோ தொகை – உலகின் டாப் டி20 தொடர்களின் பரிசுத்தொகை பட்டியல் இதோ

T2 World Cup vs IPL ICC vs BCCI
- Advertisement -

உலக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. என்னதான் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் வந்தாலும் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் 8வது முறையாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. இம்முறை நடப்பு சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் நிலையில் அதற்கு போட்டியாக உலகின் நம்பர்-1 டி20 அணியாக திகழும் இந்தியா, இங்கிலாந்து போன்ற டாப் அணிகள் களமிறங்குகின்றன.

ICC T20 World Cup

- Advertisement -

முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று, நாக்-அவுட் சுற்று மற்றும் மாபெரும் பைனல் என மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும் இந்த தொடர் வரும் நவம்பர் 13ஆம் தேதி வரை மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட், ஹோபார்ட், பிரிஸ்பேன், பெர்த், கீலோங் போன்ற ஆஸ்திரேலியாவின் பிரபலமான நகரங்களில் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக முதன்மை சுற்றாக கருதப்படும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 22ஆம் தேதியன்று தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதை தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் மோதுகின்றன.

பரிசுத்தொகை:
அப்படி உலக டி20 கிரிக்கெட்டின் திருவிழாவாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் எதிரணிகள் கொடுக்கும் சவால்களை கடந்து இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 13.02 கோடிகள் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரில் மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கும் ஐசிசி முதல் சுற்று முதல் சூப்பர் 12 சுற்று வரை ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு அணியும் பதிவு செய்யும் வெற்றிக்கும் தனித்தனியாக பரிசுகளை அறிவித்துள்ளது.

aus 1

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டின் தலைவனாக போற்றப்படும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணியின் பரிசு தொகையை ஐபிஎல் போன்ற இதர டி20 தொடர்களின் கோப்பையை வெல்லும் அணியின் பரிசுத் தொகையுடன் ஒப்பிட்டு எந்த தொடரில் அதிக தொகை வழங்கப்படுகிறது என்று வித்தியாசமான பதிவை பார்ப்போம்:

- Advertisement -

1. 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையை விட பணத்திலும் தரத்திலும் நம்பர் டி20 தொடராக இருப்பதை ஏற்கனவே அறிவோம். அதிலும் சமீபத்தில் 48,390 கோடிக்கு ஒளிபரப்பு உரிமம் ஏலம் போனதை அடுத்து என்பிஏ, ஈபிஎல் போன்ற அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நடத்தும் கூடைப்பந்து, கால்பந்து தொடர்களை மிஞ்சியுள்ள ஐபிஎல் என்எப்எல் தொடருக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக வருமானத்தை ஈட்டும் 2வது விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்படி பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் உலகிலேயே அதிக பட்சமாக 20 கோடி பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

2. அதற்கு அடுத்தபடியாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 13.02 கோடி பரிசாக ஐசிசி கொடுக்கிறது.

- Advertisement -

3. வெஸ்ட் இண்டீஸ் வாரியம் கடந்த 10 வருடங்களாக நடத்திவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய ரூபாயில் 8.14 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

4. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நடைபெறும் பிபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ஆச்சரியப்படும் வகையில் 6.92 கோடி பரிசளிக்கப்படுகிறது.

- Advertisement -

5. ஏனெனில் வங்கதேசத்தை விட வளர்ந்த நாடாக கருதப்படும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடரில் வெறும் 3.66 கோடி மட்டுமே சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கொடுக்கபடுகிறது.

psl 1

6. அதற்கடுத்தபடியாக ஐபிஎல் தொடரை மிஞ்சாமல் ஓயமட்டோம் என்று தினந்தோறும் சபதம் எடுத்து வரும் பாகிஸ்தான் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் தொடரில் வெற்றியாளருக்கு 3.40 கோடி பரிசளிக்கப்பட்டு வருகிறது.

7. அதை தொடர்ந்து சமீபத்தில் இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஹண்ட்ரட் தொடரில் வெல்லும் அணிக்கு 1.30 கோடி பரிசாக கொடுக்கப்படுகிறது. இந்தத் தொடர்களை தவிர்த்து உலகில் நடைபெறும் எஞ்சிய டி20 தொடர்களில் 1 கோடிக்கும் குறைவான பரிசே கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement