டாஸின் போதே தோனி குறித்த கேள்விக்கு மிக அழகாக பதில் சொன்ன ருதுராஜ் கெய்க்வாட் – பையன் பெரிய ஆளா வருவான்

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசனானது மார்ச் 22-ஆம் தேதியான இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த முதலாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதி வரும் வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக 17-வது ஐபிஎல் தொடருக்கான பிரமாண்டமான துவக்க விழாவும், இசைக்கச்சேரியும் நடைபெற்றது.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சார்பில் முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து போட்டி துவங்கியதும் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆர்சிபி அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாற 78 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் இறுதி நேரத்தில் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

குறிப்பாக 6 ஆவது விக்கெட்டுக்கு இறுதிப்பந்து வரை ஜோடி சேர்ந்த அவர்கள் இறுதியில் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் டாசின் போது சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இடத்தில் விளையாடுவது குறித்த கேள்வி ருதுராஜிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்க ருதுராஜ் கூறுகையில் : தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய ஷூ வில் நான் நிற்க வரவில்லை.

இதையும் படிங்க : ஹாஸ்பிட்டல் போகாமல் சென்னைக்கு வந்து சம்பவம் செய்த ரஹ்மான்.. அசத்தல் சாதனை.. கடைசியில் பொளந்த ஆர்சிபி

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் தோனியின் இடத்தை என்னால் மட்டுமல்ல எவராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று மிக அழகாக தன்னுடைய கேப்டன்சி தனிரகம் தான் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்டம்பிற்குப் பின்னால் தோனி இருக்கும் வரை ருதுராஜுக்கு தேவையான நேரத்தில் அவர் ஆசைப்பட்டால் ஆலோசனைகளை வழங்குவார் என்று ரசிகர்களும் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டன் ஆனதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement