ஹாஸ்பிட்டல் போகாமல் சென்னைக்கு வந்து சம்பவம் செய்த ரஹ்மான்.. அசத்தல் சாதனை.. கடைசியில் பொளந்த ஆர்சிபி

CSK vs RCB 1
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கியது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்கிய இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

சென்னை அணிக்கு முதல் முறையாக ஜாம்பவான் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டார். அதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் 8 பவுண்டரிகளை பறக்க விட்டு 35 (23) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய ரஹ்மான்:
ஆனால் அப்போது அவரை ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டாக்கிய முஸ்தபிர் ரஹ்மான் அடுத்ததாக வந்த ரஜத் படிதாரையும் டக் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் அடுத்த ஓவரிலேயே தீபக் சஹார் வேகத்தில் கிளீன் போல்ட்டானார். அதனால் 42/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானமாக விளையாடி சரிவை சரி செய்யப் போராடினார்.

இருப்பினும் அவரையும் 12வது ஓவரில் 21 (20) ரன்களில் ரகானே – ரவீந்தராவின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டாக்கிய ரஹ்மான் அடுத்த சில பந்துகளில் எதிர்ப்புறம் தடுமாறிய கேமரூன் கிரீனையும் 18 (22) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி 10 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் எழுந்து நடக்க முடியாமல் ஸ்ட்ரெச்சரில் சென்றார்.

- Advertisement -

அதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பெரியளவில் காயத்தை சந்திக்காததால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமானார். அதில் முதல் போட்டியிலேயே 4 ஓவரில் 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தால் இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அவருடைய அசத்தல் பந்து வீச்சில் 78/5 என தடுமாறிய பெங்களூருவுக்கு அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய இந்த ஜோடி துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் 25 ரன்கள் விளாசி பெங்களூருவை மீட்டெடுத்தது.

இதையும் படிங்க: முதல் போட்டியிலேயே 4 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பை வழங்கி அதிரடி காட்டியுள்ள கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ

அந்த வகையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் அனுஜ் ராவத் 48* (25) களும் தினேஷ் கார்த்திக் 34 (24) ரன்களும் எடுத்ததால் தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 173/6 ரன்கள் எடுத்தது.அந்த வகையில் சிறப்பாக ஃபினிஷிங் செய்த பெங்களூரு இப்போட்டியில் சென்னை வெல்வதற்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

Advertisement