
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மே 18-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்த லீக் சுற்று போட்டிகளில் எஞ்சியுள்ள இந்த கடைசி இரண்டு ஆட்டங்கள் பிளே ஆப் வாய்ப்புக்கு மிகவும் முக்கியம் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு சி.எஸ்.கே அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 44 ரன்களையும், கார்த்திக் சர்மா 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரது இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கடைசி ஹோம் போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய அவர் இந்த போட்டியில் அதிரடியை தவிர்த்து ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 21 பந்துகளை சந்தித்து 71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 15 ரன்கள் மட்டுமே அடித்த ஆட்டமிழந்ததார்.
இதையும் படிங்க : கிரவுன்டுக்கு வந்து இருக்காரு.. ஆனா மேட்ச்ல ஆடல.. தோனி குறித்து டாஸின் போது – ருதுராஜ் சொன்னது என்ன?
அவரது இந்த மோசமான பேட்டிங்கை ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். மேலும் பவர்பிளே ஓவர்களில் மற்ற அணிகள் எல்லாம் பவுண்டரிகளை அடித்து பறக்க விட்டு வரும் வேளையில் இந்த போட்டியில் ருதுராஜ் பந்தை தடுத்து ஆடியதும் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.