நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
தோனி இன்றைய போட்டியிலும் ஆடல : ருதுராஜ் அறிவிப்பு
இவ்வேளையில் சற்று முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இன்றைய போட்டி சென்னை அணிக்கு கடைசி ஹோம் மேட்ச் என்பதனால் தோனி விளையாடுவாரா? என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
ஏனெனில் இந்த தொடரில் தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இவ்வேளையில் இந்த ஆண்டு கடைசி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் டாஸ் போட்ட பிறகு பேட்டிங்கை தேர்வு செய்த ருதுராஜ் கெய்க்வாட் ருத்ராஜ் தோனி இந்த ஆட்டத்தில் பங்கேற்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி மைதானத்திற்கு வந்துள்ளார். ஆனால் இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் பிட்டாக இல்லை. எனவே அவர் இந்த போட்டியையும் தவற விடுகிறார் என்று தெரிவித்தார். தற்போது 44 வயதாகும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : 5 ஆவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ
இவ்வேளையில் இன்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை என்பதனால் அவரது ஓய்வு முடிவு என்ன? என்பது குறித்த குழப்பமும் நீடிக்கிறது. நிச்சயம் இன்றைய போட்டியின் முடிவிற்கு பிறகு தோனி இதுகுறித்து பேச அதிக வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.



