5 ஆவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியில் விளையாடிய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது டெல்லி அணி இரண்டாவதாக பேட்டிங் செய்கையில் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் :

5 ஆவது வீரராக கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :

துவக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் 42 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 56 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐந்தாவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அப்படி கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் 6 சதம் மற்றும் 44 அரைசதம் என நேற்று அடித்த அரைசதத்துடன் சேர்த்து கே.எல் ராகுல் 50-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளை பொருத்தவரை விராட் கோலி 76 முறை 50+ ரன்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து டேவிட் வார்னர் 66 முறை 50+ ரன்களை அடித்து இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் 53 முறை 50+ ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், ரோகித் சர்மா 51 முறை 50+ ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கும் வேளையில் ஐ.பி.எல் போட்டிகளில் 50 முறை 50+ ரன்கள் அடித்து தற்போது கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு நைட் தோனி ரிட்டையர்மென்ட் அறிவிக்கிறாரா? 5 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னது – விவரம் இதோ

அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் கே.எல் ராகுல் ஒன்பது அரைசதங்களை விளாசி ஏ.பி.டி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதேபோன்று 8 முறையாக ஐ.பி.எல் சீசனில் 500 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement