வெற்றிக்கு திருப்புமுனையே அந்த 2 ஓவர்தான்.. பெங்களூரு அணியை வீழ்த்தியது குறித்து – கேப்டன் ருதுராஜ் அளித்த பேட்டி

Ruturaj-Captain
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. அதன்படி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூர் அணி சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் பின் வரிசையில் ஒன்று சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

இறுதியில் பெங்களூர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்ற ருதுராஜ் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்து சென்னை அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். இருப்பினும் பந்துவீச்சில் இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக கொடுத்திருக்க வேண்டும். பெங்களூர் அணியின் வீரர்கள் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி விட்டனர்.

- Advertisement -

இந்த போட்டியின் போது டூபிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது விக்கெட்டுகள் அடுத்தடுத்து இரு ஓவர்களில் விழுந்தது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்றவே அடுத்த சில ஓவர்களுக்கு அவர்களை எங்களால் கட்டுக்குள் வைக்க முடிந்தது. அப்படி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதே இந்த போட்டியின் திருப்புமுனையாக நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க : 42 வயதிலும் தில்லாக அசத்தும் தல தோனி.. குமார் சங்ககாராவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

அதோடு இந்த போட்டியில் நான் கேப்டன்ஷிப் செய்ததை மகிழ்ச்சியுடன் செய்தேன். ஏனெனில் எனக்கு கேப்டன்சி செய்யும்போது கூடுதலான பிரஷர் இருக்காது. ஏற்கனவே நான் இதுபோன்ற தருணங்களை கையாண்டு உள்ளேன். அதுமட்டும் இன்றி ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் கேப்டன்சி செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதோடு தோனியும் எனக்கு பக்கபலமாக அணியில் இருக்கிறார் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement