42 வயதிலும் தில்லாக அசத்தும் தல தோனி.. குமார் சங்ககாராவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

MS Dhoni 2
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக துவங்கியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த வருடத்தின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 173/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48,*, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஷூர் ரகுமான் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 174 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

42 வயதில் தல:
இருப்பினும் ரச்சின் ரவீந்திரா 37 (15), அஜிங்க்ய ரகானே 27 (19), டேரில் மிட்சேல் 22 (18) ரன்கள் எடுத்தனர். அவர்களுடன் மிடில் ஆர்டரில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சிவம் துபே பொறுப்புடன் விளையாடி 34* (28) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 25* (17) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 18.4 ஓவரிலேயே இலக்க எட்டிப்பிடித்து வென்ற சென்னை சேப்பாக்கத்தில் பெங்களூருவுக்கு எதிராக தொடர்ந்து 16வது வருடமாக 8வது போட்டியில் வெற்றி பெற்றது.

அத்துடன் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே வென்ற சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சற்று எக்ஸ்ட்ராவா ரன்களை எடுக்க தவறிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன்ஷிப் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடி 2 கேட்ச், 1 ரன் அவுட் செய்து அசத்தினார். கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: 173 ரன்ஸ் சேசிங்.. ஆர்சிபி’யை தோற்கடித்த சிஎஸ்கே.. 16வது வருடமாக கௌரவ சாதனையை தக்க வைத்தது எப்படி?

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்துள்ள அவர் இந்த போட்டியில் களமிறங்கியதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் விக்கெட் கீப்பராக விளையாடிய வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 42 வருடம் 259 நாட்கள், சிஎஸ்கே அணிக்காக, 2024*
2. குமார் சங்ககாரா : 42 வருடம் 115 நாட்கள், எம்சிசி அணிக்காக, 2020
3. ஜலட் கான் : 41 வருடம் 287 நாட்கள், ஹிந்துகுஷ் அணிக்காக, 2022
4. இர்விங் ரோஜார்ஸ் : 41 வருடம் 255 நாட்கள், அங்குயிலா அணிக்காக, 2006
5. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 183 நாட்கள், பஞ்சாப் அணிக்காக, 2013

Advertisement