தோனி பண்ண அந்த சம்பவம் தான் வெற்றிக்கு உதவியது.. மும்பை சாய்த்த பின்னர் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களையும், சிவம் துபே 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்ததால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக ரோகித் சர்மா அதிகபட்சமாக 105 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : தோனி அடித்த மூன்று சிக்ஸர்கள் தான் இந்த போட்டியில் எங்களுக்கு பெரியளவில் உதவி உள்ளது. இந்த போட்டியின் வித்தியாசமே அவர் கடைசியாக அடித்த அந்த 20 ரன்கள் தான்.

- Advertisement -

நாங்கள் இதுபோன்ற மைதானத்தில் விளையாடும் போது10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் இறுதி நேரத்தில் தோனி சிறப்பாக அடித்துக் கொடுத்தார். பும்ரா மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு எதிராக சில திட்டங்களையும் நாங்கள் வைத்திருந்தோம். அதேபோன்று பந்துவீச்சிலும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க : 500 ஸ்ட்ரைக் ரேட்டில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் அரிதான சாதனை

இது போன்ற மைதானத்தில் 6 ஓவர்களில் 60 ரன்கள் வருவதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றுதான். இந்த போட்டியில் பதிரானா மிகச் சிறப்பாக பந்துவீசினார். அதேபோன்று துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியவர்களும் சிறப்பாக பந்துவீசியத்தை மறந்துவிடக்கூடாது அனைவருமே தங்களது பங்களிப்பை சரியாக வழங்கியிருந்தனர் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement