ஜெயிச்சது எல்லாம் ஓகே தான்.. ஆனா இந்த 2-3 விஷயத்துல ஒர்க் பண்ணனும் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி பேட்டி

Ruturaj-Gaikwad
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே வெற்றியுடன் இந்தத் தொடரை அமர்க்களமாக துவங்கியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் :

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்கும் முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பெங்களூரு அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்ளான தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோரது அதிரடி காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் என்கிற டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டி 18.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ருதுராஜ் சென்னை அணியின் கேப்டனாக தனது வெற்றி பயணத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பல்வேறு விடயங்களை பேசிய ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு சில குறைகளையும் வெளிப்படையாக கூறியிருந்தார். அதன்படி அவர் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருக்குமே என்னென்ன ரோல் செய்யப் போகிறோம் என்பது நன்றாக தெரியும்.

- Advertisement -

அந்த வகையில் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கியது சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் இன்னும் 2-3 விடயங்களில் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இது போன்ற சேசிங்கில் டாப் 3 வீரர்களில் ஒருவர் 15-ஆவது ஓவர் வரை நின்று விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : எல்லா நேரமும் அதிர்ஷ்டம் இருக்காது.. அவரை தூக்கிட்டு தாக்கூரை கொண்டு வாங்க.. சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்பு

அப்படி டாப் 3 வீரர்களில் ஒருவர் 15-ஆவது ஓவர் வரை நின்றால் தான் சேசிங்கும் எளிதாக இருக்கும் என்று மிகச் சிறப்பான கருத்துக்களை அதிரடியாக ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த பேட்டியை பார்த்த பின்னர் நிச்சயம் அவரது கேப்டன்சி இனிவரும் காலங்களிலும் மிகச் சிறப்பாக அமையும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement