எல்லா நேரமும் அதிர்ஷ்டம் இருக்காது.. அவரை தூக்கிட்டு தாக்கூரை கொண்டு வாங்க.. சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்பு

Thushar Deshpandey
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. சேப்பாக்கத்தில் மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48* ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஷூர் ரகுமான் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 174 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, டேரில் மிட்சேல் 22, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ரன்கள் எடுத்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பெங்களூரு தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சென்னை தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
முன்னதாக இந்த போட்டியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்ததால் ஒரு கட்டத்தில் 78/5 என்று ஆர்சிபி திண்டாடியது. அதனால் அந்த அணி கண்டிப்பாக 150 ரன்கள் தாண்டாது என்று சென்னை ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் வெளுத்து வாங்கினர்.

அந்த சமயம் பார்த்து வசமாக சிக்கிய துசார் தேஷ்பாண்டே 17வது ஓவரில் 2 ஒய்ட்களை போட்டு தடுமாற்றமாக பந்து வீசினார். அதை பயன்படுத்திய அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அந்த ஓவரில் 25 ரன்கள் வெளுத்து வாங்கினர். சொல்லப்போனால் அதைக் கூட சென்னை ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடிந்தது என்றே சொல்லலாம். ஆனால் கடைசி ஓவரில் நேராக பந்து வீச முடியாமல் திணறிய துசார் தேஷ்பாண்டே 4 ஒய்ட் பந்துகளை போட்டு ரசிகர்களை கடுப்பேற்றினார்.

- Advertisement -

அந்த வகையில் மொத்தமாக 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 47 ரன்கள் வாரி வழங்கிய அவர் 11.80 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசினார். ஆனால் இதே போட்டியில் மற்ற சென்னை பவுலர்கள் 10 எக்கனாமியை தாண்டவில்லை. அந்தளவுக்கு டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய துசார் தேஷ்பாண்டே கடந்த வருடமும் இதே போல நிறைய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி சென்னையின் வெற்றிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார்.

இதையும் படிங்க: அந்த அதிர்ஷ்டம் கிடைச்சதால் தப்பிச்சேன்.. 3 – 4 நாட்கள் வேலை செஞ்சேன்.. அறிமுக சிஎஸ்கே வீரர் ரச்சின் பேட்டி

இருப்பினும் கடந்த முறை தோனி தன்னுடைய அனுபவத்தால் அவரை சரியாக பயன்படுத்தி கோப்பையை வென்றார். எனவே தற்போது தோனியும் இல்லாத நிலையில் அனைத்து நேரமும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதால் இவரை நீக்கிவிட்டு 2024 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டுக்கு எதிராக சதமடித்து பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய சர்துள் தாக்கூரை அணிக்குள் கொண்டு வருமாறு சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement