அந்த அதிர்ஷ்டம் கிடைச்சதால் தப்பிச்சேன்.. 3 – 4 நாட்கள் வேலை செஞ்சேன்.. அறிமுக சிஎஸ்கே வீரர் ரச்சின் பேட்டி

Rachin Ravindra
- Advertisement -

கோலகலமாக துவங்கியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. அதனால் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை சிஎஸ்கே வெற்றியுடன் துவக்கியுள்ளது. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்கள் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, டேரில் மிச்செல் 22, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ரன்கள் 18.4 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய ரச்சின்:
அதன் காரணமாக பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா முதல் முறையாக சென்னை அணிக்காக அறிமுகமானார். 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் சமீப காலங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

அதன் காரணமாக சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் இந்த முதல் போட்டியிலேயே காடைமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக அறிமுகமாக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட அவர் 37 (15) ரன்களை 246.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடிய தாம் ஐபிஎல் தொடரில் அசத்த 3 – 4 நாட்கள் ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்ததாக ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது முழுமையான செயல்பாடு என்று நினைக்கிறேன். கடைசி வரை எங்களுடைய தலையை பொறுமையாக வைத்திருந்தோம். ருதுராஜ், ரகானே ஆகியோரிடம் இருந்து நல்ல உதவி கிடைத்தது. என்னை துவக்க வீரர் என்று எனக்கு நானே நான் சொல்ல மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு உட்படுவதற்காக 3 – 4 நாட்கள் வேலை செய்தேன்”

இதையும் படிங்க: வெற்றிக்கு திருப்புமுனையே அந்த 2 ஓவர்தான்.. பெங்களூரு அணியை வீழ்த்தியது குறித்து – கேப்டன் ருதுராஜ் அளித்த பேட்டி

“அது நல்ல பயிற்சியாக இருந்தது. பிட்ச் வித்தியாசமாக இருந்தது. நான் பந்தை சரியாக அடிக்கிறேனா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும் ஆரம்பத்திலேயே எனக்கு எட்ஜ் வாயிலாக பவுண்டரி கிடைத்தது. அது பதற்றமாக இருந்த என்னை செட்டிலாக்க உதவியது. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிலர் இருக்கும் (சிஎஸ்கே அணி) சூழ்நிலையில் செட்டிலாவது மிகவும் எளிதானது” என்று கூறினார்.

Advertisement