- Advertisement -
ஐ.பி.எல்

இந்த விடயத்தில் தோனியின் தலையீடு கொஞ்சமும் இல்லை.. எங்களது முடிவு தான் – ருதுராஜ் கெய்க்வாட் கருத்து

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனானது மார்ச் 28-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தோனி டீம் மீட்டிங்கில் தலையிடுவது இல்லை : ருதுராஜ் கெய்க்வாட்

இந்த தொடருக்கான சிஎஸ்கே அணியும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரே தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் தோனி குறித்து பல்வேறு விவரங்களையும் பல வீரர்கள் வெளிப்படுத்தி வரும் வேளையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் தோனி தொடர்பான ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் டீம் மீட்டிங்கில் தோனி எந்த ஒரு தலையீடும் வைத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் அணி விவாதங்களில் நேரடியாக கலந்து கொள்வதில்லை. பிளமிங்கும் நானும் தான் அணியின் விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். களத்தில் அவரது ஆலோசனை கேட்டாலும் அதை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் எங்களிடம் கூறுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் இடத்தை இம்பேக்ட் பிளேயராக வந்து நிரப்பப்போவது யார்? – கைவசம் இருக்கும் ஆப்ஷன்கள்

எங்களது யோசனைகளால் அணியை வழிநடத்த வேண்டும் அவர் நம்புகிறார். அணியின் நலனுக்காக அவர் எதையும் செய்ய காத்திருக்கிறார். மேலும் அணிக்கு தேவையான நேரத்தில் அவர் ஆலோசனைகளையும் வழங்குவார் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -