அன்னைக்கும் தோனி கூட இருந்தாரு.. இப்போவும் கூட இருந்திருக்காரு.. வெற்றிக்கு பிறகு ருதுராஜ் சுட்டிக்காட்டிய சம்பவம்

Ruturaj-Gaikwad
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின, இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளாக தோல்வியை சந்தித்திருந்த சிஎஸ்கே அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பலமான அணி என்பதை நிரூபித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 137 ரன்களை மட்டுமே குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 17.4 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஏனெனில் நான் ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தை அடிக்கும் போது என்னுடன் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தோம். அதன் பிறகு தற்போது கேப்டனாக நான் முதல் அரைசதத்தை அடிக்கும் போதும் தோனி என்னுடன் இருந்துள்ளார்.

- Advertisement -

இப்போதும் நாங்கள் இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளோம். இந்த மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் வரை இருந்தால் கடினமாக இருந்திருக்கும். இந்த மைதானம் சிக்ஸ் அடிப்பதற்கு சாதகமான மைதானம் அல்ல. பவுண்டரிகளை அடித்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் ரன்கள் வரும் என்பதே உண்மை. ஜடேஜா பவர்பிளேவிற்கு பிறகு வந்து மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.

இதையும் படிங்க : எந்த இடம் கிடைச்சாலும் சிஎஸ்கே ரசிகர்கள் முன்னாடி அதை செய்வதே என்னோட வேலை.. மிட்சேல் பேட்டி

எங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கு தனித்தனியே நாங்கள் எதுவும் அட்வைஸ் செய்ய தேவையில்லை. ஏனெனில் எல்லோருமே அவர்களது பங்களிப்பை உணர்கிறார்கள். மேலும் தோனி, பிளமிங் போன்றவர்கள் நம்முடன் இருப்பதனால் வீரர்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. இந்த போட்டியின் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement