எந்த இடம் கிடைச்சாலும் சிஎஸ்கே ரசிகர்கள் முன்னாடி அதை செய்வதே என்னோட வேலை.. மிட்சேல் பேட்டி

Daryl Mitchell
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏப்ரல் எட்டாம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுமாராக விளையாடி 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, தூஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 138 ரன்களை துரத்திய சென்னைக்கு டேரில் மிட்சேல் 25 (19), சிவம் துபே 28 (18) ரன்கள் விளாசினர். அவர்களுடன் இணைந்து நங்கூரமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 67* (58) ரன்கள் எடுத்ததால் 17.4 ஓவரிலேயே 141/3 ரன்கள் எடுத்த சென்னை எளிதாக வென்றது.

- Advertisement -

ஸ்பெஷல் ரசிகர்கள்:
அதனால் 2 தொடர் தோல்விகளை நிறுத்திய சென்னை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் வலுவான கொல்கத்தாவை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பியது. மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்கள் எடுக்கத் தவறிய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இந்த போட்டியில் திடீரென அஜிங்க்ய ரகானே காயத்தை சந்தித்ததால் டேரில் மிட்சேல் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த வாய்ப்பில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த அவர் 25 (19) ரன்கள் எடுத்து தனது வேலையை செய்து சுனில் நரேன் பந்தில் அவுட்டானார்.

- Advertisement -

இந்நிலையில் பேட்டிங்கில் எந்த இடம் கிடைத்தாலும் அதில் சிறப்பாக விளையாடிய ஸ்பெஷலான சிஎஸ்கே ரசிகர்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதே தம்முடைய வேலை என டேரில் மிட்சேல் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்ருமாறு. “ஸ்பெஷலான ரசிகர்கள் முன்பாக வந்து பேட்டிங் செய்து வெற்றியும் காண்பது எப்போதுமே அருமையானதாகும்”

இதையும் படிங்க: தல தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஜடேஜா.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக தனித்துவ சாதனை

“பிட்ச்சில் மேற்பரப்பு மெதுவாக இருந்ததால் முடிந்தளவு போட்டியை ஆழமாக எடுத்து செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாகும். நரேன் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். என்னைப் பொறுத்த வரை சில திட்டங்களுடன் வந்து அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதே இலக்காகும். அது எனக்கு வேலையும் செய்தது. ருதுராஜ் கடைசி வரை விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருந்தது. நான் எங்கே பேட்டிங் செய்தாலும் பரவாயில்லை. விளையாட்டில் வெற்றி பெறுவதற்காகவே இங்கு நான் வந்துள்ளேன். அதை செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement