சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது.
3 ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? : ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு 19.1 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். இந்த போட்டியின் போது 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாட களமிறங்கிய போது வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் இம்முறை களத்திற்கு வரவில்லை.
அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் களத்திற்கு வந்தனர். அந்த வகையில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 2 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்த பின்னர் மூன்றாவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் போட்டிக்கு பிறகு தனது பேட்டிங் ஆர்டர் மாற்றம் குறித்த சில கருத்துக்களையும் ருதுராஜ் கெய்க்வாட் பேசியிருந்தார். அந்த வகையில் ருதுராஜ் கூறுகையில் : இந்த போட்டியின் போது மூன்றாவது வீரராக நான் களம் இறங்கினால் அது அணியின் பேலன்ஸை அதிகரிக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் தான் இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம். நான் மூன்றாவது இடத்திற்கு மாறியதில் உண்மையில் மகிழ்ச்சி தான்.
இதையும் படிங்க : கலீல் மற்றும் ருதுராஜ் இணைந்து செய்த குற்றச்செயல்.. வைரலாகும் ஆதாரங்கள்.. தண்டனை கிடைக்குமா? – நடந்தது என்ன?
ஏனெனில் ராகுல் திரிப்பாதி அதிரடியாக விளையாட கூடியவர். அவர் துவக்க வீரராக களமிறங்கும் முடிவும் சிறப்பான ஒன்றுதான். நான் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதன் மூலம் கூடுதல் பேலன்ஸ் நிச்சயமாக கிடைக்கும் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



