ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று மார்ச் 23-ஆம் தேதி மதியம் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
கலீல் அகமது மற்றும் ருதுராஜ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு :
அதனை தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இடத்துடன் விளையாடிய சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் செய்த செயல் ஒன்று தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது பந்து வீசிக்கொண்டிருந்த கலீல் அகமது தான் பாக்கெட்டில் ரகசியமாக வைத்திருந்த ஒரு பொருளை கையில் எடுத்து அதை மறைத்தபடியே கேப்டன் ருதுராஜின் கையில் கொடுத்தார். அதனை வாங்கிய ருதுராஜும் அவருடன் பேசியபடியே அந்த பொருளை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவரும் பால் டேம்பரிங் செய்துள்ளதாக விடீயோவின் மூலம் ஒரு சில ஆதாரங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான டக் அவுட்.. ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை – ஹிட்மேனுக்கு நேர்ந்த சோகம்
ஏற்கனவே சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டு இருந்த வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியிலேயிலே இரு வீரர்கள் மீது பால் டேம்பரிங் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவேளை அவர்கள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் அவர்களுக்கு தன்டனை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.



