இந்த வருஷம் நாங்க இப்படி 9 ஆவது இடம் பிடித்து மோசமாக வெளியேற இதுதான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

Ruturaj
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மட்டுமின்றி இறுதியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையையும் சென்னை அணி கைப்பற்றி இருந்தது. இப்படி கெத்தாக நடப்பு சாம்பியனாக இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த 15-வது சீசனில் அடியெடுத்து வைத்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலிருந்தே சறுக்கல் ஏற்பட்டது என்று கூறலாம். ஏனெனில் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

CSK Ms DHoni

- Advertisement -

அதனால் ஜடேஜாவின் தலைமையில் இம்முறை சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால் முதல் எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால் கேப்டன்சி அழுத்தத்தை தாங்க முடியாமல் மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடமே ஜடேஜா வழங்கினார். அதன் பின்னரும் சென்னை அணியால் அந்த பின்னடைவில் இருந்து மீண்டு வரமுடியாமல் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சென்னை அணி எஞ்சியுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட ஒன்பதாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் சென்னை அணியின் தடுமாற்றம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தனது மனம் திறந்த கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Ruturaj Kane Williamson

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதை என்னால் மறக்க முடியாது. ஆனால் இம்முறை நாங்கள் அடைந்த சரிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் கேப்டன் மாற்றம், முக்கிய வீரர்கள் விலகல், வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் என பல காரணங்கள் இருக்கலாம். பலரும் எங்கள் அணிக்கு அதிர்ஷ்டம் இம்முறை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் நான் சொல்லக் கூடிய பதில் ஒன்றே ஒன்றுதான்.

- Advertisement -

இந்த சீசனில் எங்களுடைய திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை இந்தமுறை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த வருடம் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆண்டை கடந்து அடுத்த ஆண்டு நாங்கள் நிச்சயம் பலமான அணியாக திரும்புவோம்.

இதையும் படிங்க : எல்லாம் பந்தையும் சிக்ஸ் அடிக்கனும்னு நெனச்சா இப்படித்தான் ஆகும் – ரிஷப் பண்டை விளாசிய முன்னாள் வீரர்

எனவே ரசிகர்களாகிய உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். அடுத்த சீசனில் சென்னையில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து உங்கள் அன்பை எங்களுக்கு தாருங்கள் என்று ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

Advertisement