எல்லாம் பந்தையும் சிக்ஸ் அடிக்கனும்னு நெனச்சா இப்படித்தான் ஆகும் – ரிஷப் பண்டை விளாசிய முன்னாள் வீரர்

- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் முதல் நான்கு இடங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணியானது இம்முறை ரிஷப் பண்ட் தலைமையில் சற்று தடுமாறி வருகிறது என்று கூறலாம். ஏனெனில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் தோல்வி என மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை டெல்லி அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் 6 தோல்வி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் போராடி வருகின்றனர். இப்படி டெல்லி அணியின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக கேப்டன்சியில் ரிஷப் பண்ட் செய்யும் சில தவறுகள் முக்கிய காரணங்கள்களாக முன்வைக்கப்படுகிறது.

pant 1

அதோடு கேப்டன் பொறுப்பில் இருந்து வருவதால் அவரது பேட்டிங் சிறிதளவு தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. முன்பெல்லாம் அதிரடியாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் அவர் தற்போது அதிரடியாக விளையாடுகிறேன் என்று எளிதாக விக்கெட்டுகளை இழந்து விடுகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் செய்யும் தவறு குறித்து விமர்சித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :

- Advertisement -

ரிஷப் பண்ட் தனது பேட்டிங்கில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு பந்தில் சிக்சர் அடித்தால் அதன்பின் அடுத்த பந்தின் மெரிட்டை உணர்ந்து ஆட வேண்டியது அவசியம். ஆனால் ரிஷப் பண்ட் தற்போதெல்லாம் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி நினைத்தால் விக்கெட் விழுவது தான் நடக்கும்.

இதையும் படிங்க : மும்பை ரசிகர்கள் மீது விழுந்த இடி ! நட்சத்திர பவுலர் காயத்தால் விலகல் – அடுத்த வருடமாவது வருவாரா?

எல்லா பந்துகளையும் ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்காமல் ஏதுவான பந்துகளை விரட்டியும், சவாலான பந்துகளை சமாளித்தும் விளையாடுவதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement