மும்பை ரசிகர்கள் மீது விழுந்த இடி ! நட்சத்திர பவுலர் காயத்தால் விலகல் – அடுத்த வருடமாவது வருவாரா?

Mumbai Indians MI
- Advertisement -

மும்பை நகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 6-வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சென்னை உட்பட இதர எஞ்சிய 9 அணிகளுக்கு கூட கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்த போதிலும் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பிய அந்த அணி ஆரம்பத்திலேயே வரிசையாக 8 தொடர் தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

தற்போது 13 போட்டிகளில் 10 தோல்விகளைப் பேற்று கடைசி இடத்தில் தவிக்கிறது. அதனால் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வருடத்தில் 10 தோல்விகளை சந்தித்து பரிதாப சாதனை படைத்துள்ள அந்த அணி இதற்கு முன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததே கிடையாது என்ற நிலைமையில் இந்த வருடம் தொடர் தோல்விகளால் அந்த அவமானத்தையும் முதல்முறையாக சந்திக்க உள்ளது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

ஏலத்தில் சொதப்பல்:
இந்த தொடர் தோல்விகளுக்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் போது மும்பை அணி நிர்வாகம் செய்த தவறுதான் ஆரம்பத்திலேயே தோல்வி விதை போட்டது என்றே கூறலாம். ஏனெனில் இஷான் கிசான் என்ற ஒருவரை வாங்குவதற்காக 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவழிக்க அந்த அணி அதன் காரணமாக மேலும் சில தரமான வீரர்களை வாங்கும் வாய்ப்பை கோட்டைவிட்டது.

Jasprith Bumrah Jofra Archer

அதுகூட பரவாயில்லை என்பது போல் ஏற்கனவே காயத்தால் தவிக்கும் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் 2022 தொடரில் காயத்தால் விளையாட மாட்டார் எனத் தெரிந்தும் 8 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் இலவச சம்பளம் கொடுத்தது. அவர் தரமான பந்துவீச்சாளர் என்றாலும் விளையாடாமல் இருப்பதற்கு தேவையில்லாமல் செலவழித்த 8 கோடியில் வேறுசில வீரர்களை வாங்கியிருந்தால் மும்பையின் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் தொலைநோக்கு பார்வையுடன் 2023 சீசனில் பும்ரா – ஆர்ச்சர் கூட்டணி எதிரணிகளை திணறடிக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு வித்தியாசமான முடிவை மும்பை எடுத்திருந்தது.

- Advertisement -

ஆர்ச்சர் காயம்:
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்தது பயிற்சி எடுக்க தொடங்கிய ஆர்ச்சர் கடந்த வாரம் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக நீண்ட நாட்களுக்கு பின் பந்து வீசினார். அதனால் இங்கிலாந்து மற்றும் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் அதே கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது பின் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மீண்டும் அந்தத் தொடரிலிருந்து அவர் மொத்தமாக வெளியேறியுள்ளார்.

இது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது பின்வருமாறு. “பின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் சசக்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் எஞ்சிய சீசனிலிருந்து முழுமையாக விலகுகிறார். அவர் எப்போது திரும்புவார் என்ற நேரம் தெரியாது. வரும் நாட்களில் அவரின் காயத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனைகளை அணி நிர்வாகம் கேட்டறிய உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜூன் 2இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இங்கிலாந்து பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்:
மேலும் வரும் ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்து மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியிலும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாட போவதில்லை என்று தெரியவருகிறது. அதைவிட அவர் எப்போது திரும்புவார் என்று தெரியாது என இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது மும்பை ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஏனெனில் கடைசியாக கடந்த 2021 மார்ச் மாதம் இந்திய மண்ணில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்காக விளையாடியபோது காயமடைந்த அவர் அதன்பின் அதிலிருந்து குணமடைவதற்கு 1 வருடம் தேவைப்பட்டது.

ஆனால் தற்போது குணமடைந்து முழுமையாக திரும்பியுள்ள அவர் துரதிஷ்டவசமாக மீண்டும் காயமடைந்துள்ளார். மேலும் நேரம் சொல்ல முடியாது என்று இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கும் போது அவரின் தற்போதைய காயம் பெரிய அளவில் இருப்பதால் மீண்டும் அதிலிருந்து குணமடைய ஒரு வருடம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நல்லா பாருங்க, அது தோல்விக்கான நோ பால் தான் ! தேவையின்றி அம்பயர்களை விளாசும் கொல்கத்தா ரசிகர்கள்

அதனால் ஐபிஎல் 2023 தொடரில் மும்பைக்காக அவர் விளையாடுவதில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஏற்கனவே தொடர் தோல்விகள், பல மோசமான சாதனைகளை சந்தித்த ரணத்தில் இருக்கும் மும்பை ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Advertisement