நல்லா பாருங்க, அது தோல்விக்கான நோ பால் தான் ! தேவையின்றி அம்பயர்களை விளாசும் கொல்கத்தா ரசிகர்கள்

Stoinis No Ball
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டி அபாரமான பேட்டிங், சுமாரான பவுலிங், அற்புதமான பீல்டிங், மிரட்டல் சேசிங் என அனைத்தையும் ஒன்று சேர ஒரே போட்டியில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதனால் இந்த வருடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றிலும் அது ஒரு சிறந்த போட்டியென்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நவிமும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோவுக்கு 20 ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை வெச்சு செய்த அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஓப்பனிங் ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் முழுமையாக சரவெடி பேட்டிங் செய்து 210/0 ரன்கள் சேர்த்தனர்.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

முதல் ஓவரிலிருந்தே அட்டகாசமாக பேட்டிங் செய்து ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தும் திருப்தியடையாமல் கடைசி வரை கொல்கத்தாவுக்கு கருணை காட்டாமல் ரன் மழை பொழிந்தார்கள். அதில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் கேஎல் ராகுல் 68* (51) ரன்கள் எடுத்து கம்பெனி கொடுக்க எதிர்புறம் விஸ்வரூபம் எடுத்த குயின்டன் டி காக் 10 பவுண்டரிகளையும் 10 இமாலய சிக்சர்களையும் பறக்கவிட்டு 140* (70) ரன்கள் தெறிக்கவிட்டார்.

போரடிய கொல்கத்தா:
அதனால் ஐபிஎல் வரலாற்றில் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த முதல் ஜோடி என்ற சாதனை படைத்த இவர்கள் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய வரலாற்று சாதனையையும் படைத்தனர். அதைத்தொடர்ந்து 211 என்ற கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் 0 (4) அபிஜித் தோமர் 4 (8) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

Andre Russell Mosin Khanjpeg

அதனால் படு தோல்வி உறுதி என நினைத்த வேளையில் அடுத்து களமிறங்கிய நித்திஸ் ராணா அதிரடியாக 42 (22) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 (29) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் சாம் பில்லிங்ஸ் தனது பங்கிற்கு அதிரடியாக 36 (24) ரன்கள் சேர்த்து அவுட்டாக அந்த சமயத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 5 (11) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

சர்ச்சை நோ பால்:
ஆனால் கடைசி நேரத்தில் ஆனது ஆகட்டும் என்ற வகையில் சுனில் நரேன் – ரிங்கு சிங் ஆகியோர் மிரட்டலான சிக்ஸர்களை பறக்கவிட்டதால் போட்டியில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது அதை ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டோனிஸ் வீசிய நிலையில் அதை எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ரின்கு சிங் 4, 6, 6, 2 என அதிரடியாக 4 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்ததால் கொல்கத்தா வெற்றியை நெருங்கியது. இருப்பினும் 5-வது பந்தில் பவுண்டரியை பறக்கவிட்ட போது சூப்பர் மேனை போல ஓடிவந்து தாவிப் பிடித்த எவின் லெவிஸ் சூப்பரான கேட்ச் பிடித்ததால் 40 (15) ரன்கள் எடுத்த ரிங்கு சிங் போராட்டம் வீணானது.

Evin Lewis Rinu SIngh Catch

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய உமேஷ் யாதவ்வை கிளீன் போல்ட்டாக்கிய ஸ்டோனிஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் 14 போட்டிகளில் 9-வது வெற்றியைப் பெற்ற லக்னோ குஜராத்தை தொடர்ந்து 2-வது அணியாக பிளே ஆப் சென்றது. மறுபுறம் போராடி தோற்ற கொல்கத்தா மும்பை, சென்னையை தொடர்ந்து 3-வது அணியாக வெளியேறியது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் உயிரைக் கொடுத்துப் போராடிய ரின்கு சிங்கை அவுட்டாக்கிய ஸ்டோனிஸ் வீசிய 5-வது பந்து நோ பால் என்றும் ஆனால் அதை அம்பயர் கவனிக்காமல் விட்டதால் கொல்கத்தா தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போது அனைத்து கொல்கத்தா ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக அம்பயர்களை திட்டி வருகின்றனர்.

தேவையற்ற விவாதம்:
அதிலும் பந்தை அவர் கையிலிருந்து ரிலீஸ் செய்யும் போது அவரின் கால் வெள்ளை கோட்டை தாண்டி விட்டதாகவும் இது அப்பட்டமான நோபால் என்றும் கொல்கத்தா ரசிகர்கள் பேசுகின்றனர். ஒருவேளை அதை சரியாக அம்பயர் கவனித்து நோபால் வழங்கியிருந்தால் 1 எக்ஸ்ட்ரா ரன், 1 எக்ஸ்ட்ரா பந்து கிடைத்து தங்களது அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்றும் சாடுகின்றனர்.

இதையும் படிங்க : அந்த ஒரு ஷாட்டை என்னால விளையாட முடியாமல் போனா நான் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிடுவேன் – விராட் கோலி

அந்த பந்தை பார்க்கும் போது ஸ்டோனிஸ் கால் 90% வெள்ளைக்கோட்டை தாண்டியது போல் தெரிந்தாலும் பந்தை ரிலீஸ் செய்யும்போது அவரது பின்னங்காலின் விளிம்பு பகுதி கோட்டில் இருக்கிறது. எனவே அடிப்படை விதி முறைப்படி பந்தை ரிலீஸ் செய்யும்போது காலின் ஏதேனும் ஒரு பகுதி கோட்டில் இருந்தால் போதுமானது என்ற நிலைமையில் கொல்கத்தா ரசிகர்களின் இந்த விவாதம் தேவையற்றது என இதர ரசிகர்கள் பதிலளிக்கின்றனர். மேலும் இப்போது நோ பால்களை கவனிப்பதற்காவே தனி அம்பயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement