சிஎஸ்கே கேப்டன்ஷிப் கஷ்டமான வேலை.. ஆனா அந்த 3 பேர் இருக்கும் போது கவலையுமில்ல.. ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஜாம்பவான் எம்எஸ் தோனி விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதனால் சிஎஸ்கே அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகள், 133 வெற்றிகளை பெற்ற தோனியின் மகத்தான கேப்டன்ஷிப் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ளது என்றே சொல்லலாம்.

கடந்த 2008 முதல் அவருடைய தலைமையில் விளையாடிய 14 சீசனங்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை 10 முறை ஃபைனலுக்கு சென்று 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு மகத்தான அவருடைய இடத்தில் தற்போது இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

பெரிய வேலை:
கடந்த 2019இல் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான அவர் 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் கடந்த 5 வருடங்களாக தோனி தலைமையில் விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி கணிசமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆனால் பேட்ஸ்மேனாக ஓரளவு சாதித்துள்ள அவரால் கேப்டனாக தோனியின் இடத்தை நிரப்புவது அசாத்தியம் என்று சொல்லலாம். இந்நிலையில் தோனியின் இடத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய பொறுப்பான வேலை என்று ருதுராஜ் கைக்வாட் கூறியுள்ளார். அதே சமயம் தமக்கு தோனி, ரகானே, ஜடேஜா ஆகிய 3 அனுபவ வீரர்கள் உதவியாக உள்ளதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே கேப்டன்ஷிப் அழுத்தத்தை நினைத்து கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது நல்ல உணர்வை கொடுக்கிறது. கண்டிப்பாக இது கௌரவமாகும். அதையும் தாண்டி நான் அதிகமாக உணர்கிறேன். அதே சமயம் இது மிகப்பெரிய பொறுப்பாகும். இருப்பினும் எங்களிடம் நல்ல அணி இருப்பதால் நான் உற்சாகமாக இருக்கிறேன். எல்லோருக்கும் போதுமான அனுபவம் இருக்கிறது”

இதையும் படிங்க: இதான் தல வழி.. எங்களுக்கே தெரியாது.. தோனியின் அந்த டார்கெட் இப்போ மிஸ்ஸாகாது.. காசி விஸ்வாதான் பேட்டி

“அதனால் எனக்கு அதிக வேலை செய்ய வேண்டியதில்லை. மேலும் எனக்கு அணியில் மஹி பாய், ஜடேஜா பாய், ரஹானே பாய் ஆகியோர் வழி நடத்துவதற்காக உள்ளனர். எனவே கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த வேலையை நான் அனுபவிக்க காத்திருக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக சயீத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் மகாராஷ்டிரா மாநில அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் ருதுராஜிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement