இதான் தல வழி.. எங்களுக்கே தெரியாது.. தோனியின் அந்த டார்கெட் இப்போ மிஸ்ஸாகாது.. காசி விஸ்வாதான் பேட்டி

Kasi Viswanathan
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் தொடர் துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஜாம்பவான் எம்எஸ் தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் சென்னை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். மேலும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ள தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

தோனி வழி:
இருப்பினும் 41 வயதை தாண்டி விட்ட அவர் கடந்த வருடமே முழங்கால் வலியுடன் விளையாடி சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக காலத்திற்கும் விளையாட முடியாது எண்பத்தையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு 2019 முதல் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கையில் கேப்டன்ஷிப் பதவியை ஒப்படைத்துள்ள தோனி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடும் முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான கேப்டன்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாகத்தான் தோனி இந்த முடிவை எடுத்தது தமக்கே தெரியும் என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் தோனி எந்த முடிவு எடுத்தாலும் அதை சிஎஸ்கே அணிக்கு நன்மையை கொடுக்கும் என்பதால் அதை தாங்கள் மதிப்பதாகவும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் 2022இல் ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் ஒப்படைத்தது வேலையாகவில்லை என்றாலும் இம்முறை ருதுராஜை குறி வைத்து புதிய கேப்டனாக தோனி தேர்வு செய்துள்ள முடிவை தவறாகாது என்றும் விஸ்வநாதன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி என்ன செய்தாலும் அது அணியின் நன்மைக்காகவே இருக்கும். கேப்டன்கள் சந்திப்புக்கு சற்று முன்பாகத் தான் தோனி இந்த முடிவை எடுத்துள்ளதை நானே தெரிந்து கொண்டேன்”

இதையும் படிங்க: 2022இல் மிஸ்ஸான டைமிங்.. கேப்டனா இல்லனாலும் சிஎஸ்கே’வுக்காக தோனி அதை செய்வாரு.. பிளெமிங் பேட்டி

“அவருடைய முடிவை நீங்கள் மதிக்க வேண்டும். இது தோனியின் முடிவு. 2022இல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்த போது அது வேலை செய்யவில்லை. ஆனால் இம்முறை தோனி எடுத்துள்ள முடிவு வித்தியாசமானது” என்று கூறினார். அவர் கூறுவது போல உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாததால் தடுமாறிய ஜடேஜா மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டிருப்பதால் ருதுராஜ் சென்னையை வழி நடத்த தகுதியானவர் என்று தோனி தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement