Qualifier 1 : புனே, மும்பை, அகமதாபாத், சென்னை எங்க போட்டாலும் அடிப்பேன். குஜராத் அணிக்கெதிராக -ருதுராஜ் அசத்தல்

Ruturaj Gaikwad
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிபயர் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்று மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவும் குவிந்து காணப்படுகிறது.

CSK vs GT

- Advertisement -

இந்நிலையில் இந்த முக்கியமான முதலாவது குவாலிபயர் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் விளையாடி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை மைதானத்தில் நடந்த போட்டிகளில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தாலே வெற்றி பெற முடியும் என்பதனால் நிச்சயம் இந்த போட்டியில் முதலில் விளையாடி வரும் சென்னை அணி 180 ரன்களை அடிக்க வேண்டும். அந்த ஸ்கோரை நோக்கியே தற்போது சென்னை சிறப்பாக விளையாடி வருகிறது.

Ruturaj Gaikwad 1

அதன்படி தற்போது முதலில் விளையாடி வரும் சென்னை அணியானது முதல் விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்து அசத்தியது. முதல் விக்கெட்டாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தற்போது சென்னை அணி தங்களது இன்னிங்க்ஸை சிறப்பாக முடிக்க தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்ததன் மூலம் குஜராத் அணிக்கு எதிராக சிறப்பான சம்பவம் ஒன்றினை செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி இதுவரை சி.எஸ்.கே அணிக்கு எதிராக நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது.

இதையும் படிங்க : Qualifier 1 : காத்து அடிக்குதுங்க. யாரும் பயப்பட வேணாம். டாஸின் போதே ரசிகர்களை உற்சாகப்படுத்திய – தல தோனி

அந்த நான்கு போட்டிகளும் புனே, மும்பை, அகமதாபாத், சென்னை என நான்கு வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றுள்ள வேளையில் இந்த நான்கு போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் போதும் 44 பந்துகளை சந்தித்த ருதுராஜ் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement