Qualifier 1 : காத்து அடிக்குதுங்க. யாரும் பயப்பட வேணாம். டாஸின் போதே ரசிகர்களை உற்சாகப்படுத்திய – தல தோனி

MS-Dhoni
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த தொடரின் புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது குவாலிபயர் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

CSK vs GT

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

சென்னை மைதானம் சேசிங் செய்யும் போது ஒத்துழைக்கும் என்பதனாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் டாசுக்கு பிறகு சற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு தகர்ந்தது என்றே கூறலாம். ஆனாலும் டாசில் தோல்வி அடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டி ரசிகர்களுக்கு உடனடியாக உற்சாகத்தை ஏற்படுத்தியது. அப்படி டாசுக்கு பிறகு தோனி என்ன பேசினார் என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

Conway and Gaikwad

அதன்படி தோனி கூறுகையில் : நாங்களும் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் குஜராத் அணி சேசிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணி எனவே அவர்களுக்கு எதிராக முதலில் பந்துவீச வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் டாஸ் என்பது நமது கையில் கிடையாது.

- Advertisement -

இந்த தொடரில் நமது அணி வீரர்கள் மிகச் சிறப்பாகவே போட்டிகளை அணுகி வருகின்றனர். நிச்சயம் இந்த போட்டியிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோடு இந்த போட்டியில் வெற்றி பெறும் அளவிற்கு எங்களிடம் நம்பிக்கையும் உள்ளது. கட்டாயம் இந்த போட்டியில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதையும் படிங்க : IPL 2023 : தோனி அழுததை அன்று இரவு தான் நேராக பாத்தேன் – ரசிகர்கள் அறியாத தருணத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்

கடந்த போட்டியின் போது டியூ நிறைய இருந்தது. ஆனால் இன்று மைதானம் முழுவதும் காற்று நிறைய அடிக்கிறது எனவே டியூ பற்றி இன்றைய போட்டியில் அதிக அளவு பிரச்சனை இருக்காது என்று தான் நினைப்பதாகவும் மைதானம் டிரையாக இருப்பதால் நிச்சயம் எங்களால் சிறப்பாக பந்துவீச முடியும் என்றும் தோனி நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement