IPL 2023 : தோனி அழுததை அன்று இரவு தான் நேராக பாத்தேன் – ரசிகர்கள் அறியாத தருணத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றும் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்றி துவங்கியுள்ளது. அதில் தங்களுடைய 5வது கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து வரலாற்றில் பங்கேற்ற 14 சீசன்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் ஒப்படைத்த தவறான முடிவால் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்த அந்த அணி இம்முறை தோனி தலைமையில் கிட்டத்தட்ட அதே வீரர்களுடன் மீண்டும் களமிறங்கி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது.

மேலும் 2020இல் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அந்த அணி 2021இல் கோப்பையை வென்று மாஸ் கம்பேக் கொடுத்தது போல் இம்முறையும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதலே இந்தியாவின் ஜாம்பவான் கேப்டனான எம்எஸ் தோனி தலைமையில் தொடர்ந்து எதிரணிகளை தெறிக்க விட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்த சென்னை 2015இல் சூதாட்ட புகாரில் சிக்கி ராஜஸ்தான் அணியுடன் 2 வருடங்கள் தடை பெற்றது.

- Advertisement -

அழுத தோனி:
குறிப்பாக உரிமையாளர்களில் ஒருவர் அந்த சர்ச்சையில் சிக்கியதால் சென்னைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் தவறான செயல்களில் ஈடுபடாத தோனி, சுரேஷ் ரெய்னா உட்பட அந்த அணிக்காக விளையாடி அனைவரும் 2016, 2017 ஆகிய சீசன்களில் புனே மற்றும் குஜராத் அணிக்காக விளையாடினர். அதைத்தொடர்ந்து 2018 சீசனில் மீண்டும் தோனி தலைமையில் பெரும்பாலும் சீனியர் வீரர்களுடன் களமிறங்கிய அந்த அணி டாடி ஆர்மி என்று எதிரணி ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது.

ஆனால் ஷேன் வாட்சன், ராயுடு போன்ற அனுபவமிக்க வீரர்களை வைத்து சாதித்த சென்னை 3வது கோப்பையை வென்று அற்புதமான கம்பேக் கொடுத்தது. பொதுவாக குடியிருக்கும் வீடு முதல் செல்லப்பிராணி வரை நீண்ட காலம் பழகிவிட்டால் அதை விட்டு பிரிவது யாருக்குமே மிகப்பெரிய வேதனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் 2 வருடங்கள் தடைபெற்று மீண்டும் 2018இல் சென்னை அணிக்காக ஒன்று சேர்ந்து விளையாட வந்த முதல் நாளன்று இரவு தோனி தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டதாக அந்த சமயத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே ஆண்கள் கண்ணீர் விட மாட்டார்கள் என்ற நிலைமையில் கூலாக இருக்கக்கூடிய தோனி அன்று தான் முதல் முறையாக அழுது பார்த்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஒரு பழைய கதையை நான் பகிர விரும்புகிறேன். அதாவது 2018இல் 2 வருடங்களுக்குப் பின் சென்னை மீண்டும் கம்பேக் கொடுத்த போது ஒருநாள் இரவில் அணியின் டின்னருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக ஆண்கள் அழ மாட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அன்றைய நாள் இரவில் அழுத தோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அந்த தருணத்தை யாரும் அறிய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சரியா இம்ரான்” என்று அருகிலிருந்த தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாகிருடன் பேசினார்.

அதற்கு அப்போது தான் சென்னை என்பது அணி அல்ல குடும்பத்தை போன்றது என்பதை புரிந்து கொண்டதாக அந்த சீசனில் விளையாடிய இம்ரான் தாகிர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “ஆம் நிச்சயமாக நானும் அந்த சமயத்தில் இருந்தேன். அது தோனிக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அந்த சமயத்தில் தான் சென்னை அவருடைய இதயத்திற்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் புரிந்து கொண்டேன்”

இதையும் படிங்க:பிளே ஆப் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா வைத்திருக்கும் சாதனைகளின் பட்டியல் – வியக்க வைக்கும் தகவல் இதோ

“அவர் அந்த அணியை தம்முடைய குடும்பத்தைப் போல் கருதுகிறார். அதனால் அந்த சமயத்தில் அங்கிருந்த அனைவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம். அந்த சீசனில் 2 வருடங்கள் கழித்து நாங்கள் கோப்பையை வென்று கம்பேக் கொடுத்தோம். குறிப்பாக கிழவர்கள் என்று அனைவரும் எங்களுக்கு பட்டமளித்த போது நாங்கள் கோப்பையை வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

Advertisement