பிளே ஆப் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா வைத்திருக்கும் சாதனைகளின் பட்டியல் – வியக்க வைக்கும் தகவல் இதோ

Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்றினை கடந்து பிளே ஆப் சுற்றில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த பிளே ஆப் சுற்று போட்டிகளில் முதலாவது போட்டியாக முதலாவது குவாலிபயர் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து நாளை எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதுகின்றன.

CSK vs GT

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இரண்டாவது குவாலிபயர் போட்டி அதன் பிறகு இறுதிப்போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்த பிளே ஆப் சுற்று போட்டிகளானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் என்று வந்தாலே சென்னை அணியும், சுரேஷ் ரெய்னாவும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் ரெய்னா படைத்துள்ள சாதனைகளை இங்கு காணலாம். பரபரப்புக்கும் அழுத்தத்திற்கும் இடையே நடைபெறும் இந்த பிளே ஆப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் ரெய்னா தான். இதுவரை அவர் பிளே ஆப் போட்டிகளில் மட்டும் 714 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரரும் சுரேஷ் ரெய்னாதான். ஏழு முறை பிளே ஆப் சுற்று போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார்.

raina 1

அதேபோன்று பிளே ஆப் சுற்று போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்ததும் ரெய்னா தான் 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இப்படி அனைத்து விதத்திலும் சாதனையை நிகழ்த்தியுள்ள சுரேஷ் ரெய்னா பவுண்டரிகளிலும் தனது சாதனையை நிகழ்த்தியுள்ளார். பிளே ஆப் சுற்று போட்டிகளில் இதுவரை 40 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் பிளே ஆப் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று பிளே ஆப் சுற்றில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரராகவும் 51 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவற்றையெல்லாம் தவிர்த்து ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரரும் இவர்தான்.

இதையும் படிங்க : IPL 2023 : நீங்க தோனி தலைமையில் விளையாடினால் தான் ஜொலிக்க முடியும் – இந்திய வீரருக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

அதேபோன்று குவாலிஃபயர் போட்டி, எலிமினேட்டர் போட்டி, இறுதிப்போட்டி என பிளே ஆப் சுற்றின் அனைத்து விதமான போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்று பிளே ஆப் போட்டிகளில் 155 என நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரரும் இவர்தான். இப்படி ப்ளே ஆஃப் என்றாலே நினைவுக்கு வரும் ரெய்னா இல்லாமல் இம்முறை சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement