
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமித்தார். அவரது தலைமையில் நடப்பு ஆண்டில் கலந்து கொண்ட சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் அனைவருக்கும் விருப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்க ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தற்போது தயாராகி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை வெளியேற்றுவது? எந்தெந்த வீரர்களை தக்க வைப்பது? என்பது குறித்த திட்டங்களையும் தற்போது தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது 43 வயதாகும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை தக்க வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்த சந்தேகம் எழுந்து வரும் வேளையில் தோனியை அண்ட் கேப்டு வீரராக கருத்தில் கொண்டு குறைந்த தொகைக்கு தக்க வைக்க சிஎஸ்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இப்படி ஒருபுறம் தோனி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள இருக்கும் வேளையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக வரை குறைந்த ஊதியத்தை பெற்று வந்த ருதுராஜி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் 6 கோடி ரூபாய் என்கிற அளவில் சென்னை அணியிடம் இருந்து சம்பளமாக பெற்றார்.
இதையும் படிங்க : சீனியரா இருந்தாலும் விராட் கோலி பற்றி சொன்னது உண்மையில்ல.. அமித் மிஸ்ராவுக்கு பியூஸ் சாவ்லா பதிலடி
இந்நிலையில் தற்போது கேப்டனான ஒரே ஆண்டில் அவர் முதன்மை வீரராக சென்னை அணியில் தக்கவைக்கப்படும் வேளையில் அவரது சம்பளம் 6 கோடியில் இருந்து 16 கோடியாக உயரப்போகிறது. சென்னை அணியில் முதலாவதாக தக்க வைக்கப்படும் வீரராக அவர் கருத்தில் கொள்ளப்படுவார் என் என்பதனால் இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்க இருக்கிறது.