தொடர்ச்சியான பேட்டிங் சொதப்பல் : ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்த – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜடேஜாவின் தலைமையில் இந்த சீசனில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தாங்கள் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தற்போது ஒரு இக்கட்டான சூழலை சந்தித்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு மொத்தம் 10 அணிகளுடன் இந்த மிகப்பெரிய தொடரானது நடைபெறுவதால் அனைத்து அணிகளுக்கும் இடையே பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.

CSK-1

அந்த வகையில் தற்போது மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்ததால் இனிவரும் 11 போட்டிகளில் குறைந்தபட்சம் 9 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். எனவே இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் சென்னை அணிக்கு முக்கிய ஆட்டமாக அமைய இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக பெற்று வரும் தோல்விக்கு பவுலிங்கில் உள்ள அனுபவமின்மை, சரியான வீரர்களை தேர்வு செய்யாதது என பல காரணங்கள் பார்க்கப்படுகின்றன.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங்கிலும் ஒரே ஒரு குறையாக துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பார்ம் பார்க்கப்படுகிறது. அவரது இந்த தொடர் பேட்டிங் சொதப்பல் சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. ஏனெனில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முதல் போட்டியில் டக் அவுட், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் தலா ஒரு ரன் என வெறும் 2 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

Ruturaj
Ruturaj Gaikwad

இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து வருகிறது. ஆனால் கேப்டன் ஜடேஜா அவர் தொடர்ந்து அணியில் விளையாடுவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோன்று சென்னை அணி நிர்வாகமும் அவரை தொடர்ந்து அணியில் தக்கவைத்து விளையாட வைக்கும் என்றும் நிச்சயம் அவர் பழைய பார்முக்கு மீண்டு வருவார் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் தனது மோசமான பேட்டிங்கிற்கு பிறகு தற்போது ரசிகர்களுக்காக உருக்கமான பேட்டி ஒன்றினை அளித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை ரசிகர்களுக்கு நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த ஆண்டு நாங்கள் தான் சாம்பியன் அணி.

இதையும் படிங்க : சி.எஸ்.கேவுக்கு வந்த அப்புறம் தான் அவர் ஒரு சூப்பர் பிளேயர்னு எனக்கு தெரியும் – மைக்கல் ஹசி ஓபன்டாக்

சென்ற ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எவ்வாறு ஆதரவு அளித்தீர்களோ அதேபோன்று இந்த ஆண்டும் எங்களின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தாருங்கள். நிச்சயம் நாங்கள் மீண்டு வந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவோம். உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன் இனி வரும் போட்டிகளில் நிச்சயம் எனது 100 சதவீத பங்களிப்பை வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement