சி.எஸ்.கேவுக்கு வந்த அப்புறம் தான் அவர் ஒரு சூப்பர் பிளேயர்னு எனக்கு தெரியும் – மைக்கல் ஹசி ஓபன்டாக்

Hussey
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், 2-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராகவும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்து ஹாட்ரிக் தோல்வியை முதல்முறையாக சந்தித்துள்ளது.

CSK vs PBKS 3

- Advertisement -

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் சிஎஸ்கே ஜடேஜாவின் தலைமையில் எவ்வாறு செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்று போட்டிகளிலுமே சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்காக கடந்த ஆண்டு கோப்பையை வென்ற அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறியது சற்று வருத்தமாக இருந்தது.

moeen ali 2

இந்நிலையில் மொயின் அலி குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் மொயின் அலி மிகவும் அற்புதமான வீரர். ஆனால் அவர் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய போது தான் அவர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் என்பதை நான் உணர்ந்தேன். கடந்த ஆண்டு அவர் சென்னை அணியில் இணைந்ததில் இருந்து செயல்பட்டு வரும் விதத்தை பார்த்து தான் அவர் ஒரு மிகச்சிறப்பான பேட்ஸ்மேன் என்பதே எனக்கு தெரியும்.

- Advertisement -

சென்னை அணியில் அவர் இணையும் முன்புவரை அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பது எனக்கு தெரியாமல் போனது. அதோடு பகுதி நேர பந்து வீச்சாளராகவும் சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார் என மொயின் அலியை பாராட்டிப் பேசியுள்ளார். அவர் கூறியது போலவே கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி மொயின் அலியை ஒரு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்த போது அனைவரும் எதற்காக இந்த தேர்வு என்று பேசினர். ஆனால் அந்த தொடரில் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி மூன்றாவது வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் தமிழக வீரரான இவரை தவறவிட்டுட்டோம் – மனம்திறந்த முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

கடந்த ஆண்டு சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த அவரை அப்படியே விடாமல் அதோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் 4 வீரர்களில் ஒருவராக அவரை நேரடியாக அணி நிர்வாகம் தக்க வைக்கத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement