டி20 உலகக்கோப்பையில் தமிழக வீரரான இவரை தவறவிட்டுட்டோம் – மனம்திறந்த முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகப்பலம் வாய்ந்த அணியாக அந்த தொடரில் பங்கேற்றாலும் லீக் சுற்றுப் போட்டிகளோடு அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதிலும் குறிப்பாக அந்த தொடரின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டியில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது.

IND

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த உலகக் கோப்பை தொடரில் தமிழக வீரரான நடராஜனை இந்திய அணி தவறவிட்டது வருத்தமான ஒன்று என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நடராஜன் காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது சிறப்பாக பந்து வீசி வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் நடராஜனின் பங்களிப்பை நாம் தவற விட்டு விட்டோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய முடியாமல் போனது.

Nattu

பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் நடராஜன் யார்க்கர்களை துல்லியமாக வீசுகிறார். அதோடு பேட்ஸ்மேன்களை எந்த இடத்திலும் அடிக்க விடாமல் கட்டுக்கோப்பாக வைக்கிறார். ஒவ்வொரு முறை நான் அவரை அணியில் தேர்வு செய்யும் போதும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

அவரது முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்று அவர் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது என்று அவருடனான நினைவுகள் ரவிசாஸ்திரி பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க : என்னை மறந்துட்டாங்க ! மீண்டும் இந்திய அணிக்குள் மாஸ் கம் பேக் கொடுப்பேன் – சீனியர் வீரர் உறுதி

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய நடராஜன் வெகு விரைவாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பிடித்து பின்னர் வீரர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement