கேப்டனாக இது என்னோட வேலை.. மும்பைக்கு எதிராக ரஹானேவை ஓப்பனிங்கில் இறக்கியது ஏன்? ருதுராஜ் விளக்கம்

Ruturaj and Rahane
- Advertisement -

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் தங்களுடைய பரம எதிரியை கடைசி 5 போட்டிகளில் 4வது முறையாக வீழ்த்திய நடப்பு சாம்பியன் சென்னை 4வது வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 4வது தோல்வியை சந்தித்த மும்பை 8வது இடத்திற்கு சரிந்தது.

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னைக்கு அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20* ரன்கள் எடுத்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பொறுப்பான கேப்டன்:
பின்னர் சேசிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக சதமடித்து 105* (63) ரன்கள் குவித்து போராடினார். ஆனால் எதிர்புறம் கேப்டன் பாண்டியா, சூரியகுமார் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 20 ஓவரில் மும்பையை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்த பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக கேப்டன் ருதுராஜுக்கு பதிலாக அஜிங்க்ய ரஹானே இறங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் மும்பையில் பிறந்த அவர் வான்கடே மைதானத்தை நன்றாக தெரிந்தவர் என்பதால் மும்பை அணியை அடித்த நொறுக்க ஓப்பனிங்கில் களமிறக்கப்பட்டிருப்பார் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் கடந்த போட்டியிலேயே லேசான காயத்தால் விளையாடாத ரகானேவை இப்போட்டியில் எளிதான ஓப்பனிங் இடத்தில் களமிறக்கலாம் என்ற முடிவை எடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கைக்வாட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரஹானே லேசான காயத்தை கொண்டுள்ளார். எனவே ஓப்பனிங்கில் களமிறங்கினால் அது அவருக்கு எளிதாக நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: பாவம் சிரிக்கிற மாதிரி பாண்டியா நடிக்கிறாரு.. இது மட்டும் நடந்தா எல்லாம் முடிஞ்சுடும்.. எச்சரித்த பீட்டர்சன்

“நான் நன்றாக இருப்பதால் என்னால் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். மேலும் கேப்டனாக அது எனக்கான கூடுதல் பொறுப்பாகும்” என்று கூறினார். அந்த வகையில் அணி வீரரின் நிலையை உணர்ந்து அவருக்கு தம்முடைய ஓப்பனிங் இடத்தை கொடுத்த ருதுராஜ் பொறுப்பை உணர்ந்து கேப்டனாக மெருகேறி வருவதாக சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். அதனாலேயே தோனிக்கு பின் அவரை கேப்டனாக சிஎஸ்கே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement