பாவம் சிரிக்கிற மாதிரி பாண்டியா நடிக்கிறாரு.. இது மட்டும் நடந்தா எல்லாம் முடிஞ்சுடும்.. எச்சரித்த பீட்டர்சன்

Kevin Pieterson 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி முறை ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பம் முதலே அதிருப்தியை தெரிவித்து வரும் மும்பை ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி சொந்த ரசிகர்களின் வெறுப்புக்கு மத்தியில் விளையாடும் பாண்டியா தலைமையில் முதல் 3 போட்டிகளில் மும்பை ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது.

இருப்பினும் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியதாக கருதப்பட்டது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதி பரம எதிரி சென்னைக்கு எதிராக நடந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை மீண்டும் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு தெரிந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் தோனிக்கு எதிராக பாண்டியா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

நடிக்கும் பாண்டியா:
இந்நிலையில் சொந்த ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் மனதிற்குள் மிகப்பெரிய வேதனையை வைத்துக்கொண்டு பாண்டியா சிரிப்பது போல் நடித்து வருவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் பாண்டியாவின் மனநிலையும் கிரிக்கெட்டும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“உண்மையில் ஹர்திக் பாண்டியாவுடன் விளையாட்டில் இருந்து விலகிய அனைத்தும் அவரை பாதிக்கிறது என்று நினைக்கிறேன். டாஸ் வீசும் போது அதிகமாக சிரிக்கும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பது போல் நடிக்கிறார். உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே இருந்த நான் அதைப் பார்த்தேன். அவர் நெருப்பில் இருப்பதைப் போன்ற நிலையில் இருக்கிறார். உண்மையில் இது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லலாம்”

- Advertisement -

“ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் தற்போது முன்னாள் சிஎஸ்கே கேப்டன் சிங்கம் (தோனி) மைதானம் முழுவதும் பாண்டியாவை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது பாண்டியாவுக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும் போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க ஏதாவது நடக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சுயநலவாதி கிடையாது.. அதுக்கு அந்த ஒரு நிமிடமே சாட்சி.. விமர்சனங்களுக்கு பிரட் லீ பதிலடி

அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் போது உடனடியாக ஸ்பின்னர்களை பயன்படுத்தி எதிரணியை அட்டாக் செய்யும் யுக்தியை கேப்டனாக பாண்டியா பின்பற்றவில்லை என பீட்டர்சன் விமர்சித்தார். அந்த வகையில் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தவிக்கும் பாண்டியா அடுத்து வரும் போட்டிகளில் மும்பையை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement