ரோஹித் சுயநலவாதி கிடையாது.. அதுக்கு அந்த ஒரு நிமிடமே சாட்சி.. விமர்சனங்களுக்கு பிரட் லீ பதிலடி

Brett Lee 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பாண்டியா தலைமையில் 4வது தோல்வியை பதிவு செய்த மும்பை 8வது இடத்திற்கு சரிந்தது.

ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20* ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 105* (63) ரன்கள் குவித்து முழுமூச்சுடன் போராடினார்.

- Advertisement -

சுயநலவாதி கிடையாது:
ஆனால் எதிர்புறம் இசான் கிசான், சூரியகுமார் யாதவ், கேப்டன் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 20 ஓவரில் மும்பையை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் எடுத்தார். இருப்பினும் இப்போட்டியில் நன்கு செட்டிலான ரோகித் சர்மா கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யாததே மும்பையின் தோல்விக்கு காரணம் என்று ஒருதரப்பு ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக சதமடிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் கடைசி நேரத்தில் ரோகித் மெதுவாக விளையாடியதாகவும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. சொல்லப்போனால் கடந்த வாரம் இதே போல சதமடித்தும் பெங்களூரு தோற்றதால் அதற்கு விராட் கோலி தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போட்டியில் 100 ரன்கள் தொட்ட போது ரோகித் சர்மா பேட்டை உயர்த்தி கொண்டாடவில்லை என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுவே ரோஹித் சர்மா சுயநலமின்றி விளையாடியதற்கு சாட்சியென தெரிவிக்கும் அவர் மற்ற வீரர்கள் ரன்கள் அடிக்காததே மும்பையின் தோல்விக்கு காரணம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா அபாரமான சதமடித்தார். உண்மையில் அவர் அதிரடியாகவும் விளையாடினார். சதத்தை தொட்ட போது அவர் பேட்டை உயர்த்தாதது எனக்கு பிடித்தது”

இதையும் படிங்க: தப்பு கணக்கு போட்ட ஹார்டிக் பாண்டியா.. பாடம் புகட்டிய மாஸ்டர் தோனி – இனிமேல் யோசிக்க கூட கூடாது

“என்னைப் பொறுத்த வரை அது அணியின் வெற்றியை விட சொந்த சாதனை பெரிதல்ல என்பதை காட்டியது. அவர் முதல் பந்திலிருந்தே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடியதை நீங்கள் அறிவீர்கள். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்த அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தார். துரதிஷ்டவசமாக வெற்றிக்கு ஒருவரால் மட்டும் அனைத்தையும் செய்ய முடியாது” என்று கூறினார்.

Advertisement