ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற 22வது போட்டியில் சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 220 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பிரியான்ஸ் ஆர்யா அடித்து நொறுக்கி 103, சசாங் சிங் 52*, மார்கோ யான்சென் 34* ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
அடுத்து விளையாடிய சென்னை 20 ஓவரில் 201/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரச்சின் 36, டேவோன் கான்வே 69*, சிவம் துபே 42 ரன்கள் எடுத்தனர். அதனால் மூன்றாவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 வீழ்த்தினார். மறுபுறம் நான்காவது தொடர் தோல்வியை சந்தித்த சென்னை ஒன்பதாவது இடத்தை வலுவாக பிடித்துக் கொண்டுள்ளது.
4வது தொடர் தோல்வி:
இந்நிலையில் கடந்த 4 போட்டிகளிலுமே தொடர்ந்து தோல்வியை சந்திக்க மோசமான ஃபீல்டிங் தான் காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 4 போட்டிகளிலுமே ஃபீல்டிங் வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். அது விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று”
“நாங்கள் தவற விட்ட கேட்ச்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் 15, 20, 30 ரன்களை அடித்தனர். சில நேரங்களில் ஆர்யா போன்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் பாராட்ட வேண்டும். மிகவும் ரிஸ்க் எடுத்து விளையாடிய அவருக்கு அனைத்தும் நன்றாக வந்தது. நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தாலும் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக வேகத்தை வைத்திருந்தது. 10 – 15 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் எங்களுக்கு உதவி கிடைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் கேட்ச்கள் தவற விட்டதால் அது நடந்தது”
மோசமான ஃபீல்டிங்:
“ரச்சின் – கான்வே ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் இன்று எங்களுக்கு டாப் ஆர்டரில் பவர் பிளேவில் நன்றாக விளையாடினர். பேட்டிங் துறையில் நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்தன. இன்று நாங்கள் 2 – 3 அதிரடியான ஷாட் தொலைவுகளில் வெற்றியை விட்டோம். கான்வே பந்தை அதிகமாக டைமிங் செய்யக்கூடியவர். ஜடேஜாவின் வேலை முற்றிலும் வித்தியாசமானது”
இதையும் படிங்க: 18 ரன்ஸ்.. கான்வே பரிதாப சாதனை.. சேசிங்கில் ஃபியூஸ் போன சிஎஸ்கே 11க்கு 11 தோல்வி.. பஞ்சாப் வெற்றி
“கான்வே தடுமாற்றமாக விளையாடியதால் ரிட்டையர்டு அவுட்டு முறையில் தேவையான மாற்றம் செய்வதற்காக நாங்கள் காத்திருந்தோம். போட்டித் தூங்குவதற்கு முன் களத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என்று எங்கள் அணி வீரர்களிடம் சொன்னேன். ஏனெனில் நீங்கள் பதற்றமாக இருந்தால் கேட்ச்களை விடுவீர்கள். ஃபீல்டிங் துறையில் நீங்கள் 2, 3 ரன்களை சேமித்து ரன் அவுட் செய்வதால் அதுவே அணியின் வெற்றிக்கு உதவும். ஏனெனில் பேட்டிங், பவுலிங் துறைகளில் மோசமான நாட்கள் இருக்கும்” என்று கூறினார்.



