எதிரில் கோலி இருந்தாவே இது கஷ்டம் தான்.. நண்பன் படிதாரை அப்போவே வாழ்த்தினேன்.. ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் அந்த 2 அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வென்று அசத்தின. எனவே இந்தப் போட்டியில் வென்று வெற்றி நடையை தொடரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக சென்னை மற்றும் பெங்களூரு அணியை ஒரு காலத்தில் வழி நடத்திய ஜாம்பவான்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி இம்முறை சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப் படியாக சிஎஸ்கே அணியை ருதுராஜ் வழி நடத்தி வருகிறார். ஆர்சிபி அணி இம்முறை ரஜத் படிதாரை தங்களது புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

வாழ்த்திய ருதுராஜ்:

இந்நிலையில் ரஜத் படிதாரும் தாமும் நண்பர்கள் என்பதால் நீண்ட நாட்களாகவே அவரைப் பற்றி தமக்குத் தெரியும் என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அதனால் பெங்களூரு கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் அவருக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பியதாகவும் ருதுராஜ் கூறியுள்ளார். மேலும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி இருக்கும் பெங்களூரு அணியை எளிதாக தோற்கடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ருதுராஜ் பேசியது பின்வருமாறு. “ரஜத் படிதார் புதிய கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட உற்சாகத்துடன் உள்ளேன். பெங்களூரு அணி ரஜத்தை தங்களது கேப்டனாக அறிவித்ததும் அவருக்கு நான் மெசேஜ் செய்து வாழ்த்து சொன்னேன். நாங்கள் நீண்டக் காலமாக நண்பர்களாக இருந்து வருகிறோம்”

- Advertisement -

விராட் கோலி சவால்:

“அதனால் எங்களை ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம். ஆர்சிபி ஐபிஎல் தொடரில் ஒரு வலுவான அணியாகும். சமீப காலங்களில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் நன்றாக செயல்படுகின்றனர். மேலும் எதிரணியில் விராட் கோலி இருக்கிறார் என்றாலே அந்தப் போட்டி நீங்கள் எப்போதும் எதிர்நோக்க வேண்டிய ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும்”

இதையும் படிங்க: தோனிக்காக சிஎஸ்கே ரசிகர்கள் செய்றது ஒருநாள் ஆப்பாக மாறும்.. தோனி இதை சரிசெய்யனும்.. ராயுடு எச்சரிக்கை

“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் விராட் கோலி இருக்கும் பெங்களூருவுக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடுவதை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறினார். முன்னதாக 2008ஆம் ஆண்டு பெங்களூரு அணி கடைசியாக சென்னை அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது. அதன் பின் அங்கே நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி பெங்களூருவை தோற்கடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement