IPL 2023 : 3 தொடர் தோல்விகள், தனி ஒருவனாக போராடி 4வது முயற்சியில் குஜராத்தை சாய்த்த ருதுராஜ் – மாஸ் புள்ளிவிவரம் இதோ

Ruturaj Gaikwad
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணைகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மே 23ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முன்னாள் சாம்பியன் சென்னை மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சவாலான பிட்ச்சில் கடினமாக போராடி 20 ஓவர்களில் 172/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 (44) ரன்களும் டேவோன் கான்வே 40 (34) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதை துரத்திய குஜராத் சீரான இடவெளியில் விக்கெட்டுகளை இழந்து சென்னையின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா, பதிரனா, ஜடேஜா, சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மாஸ் ருதுராஜ்:
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற சென்னை முதல் முறையாக குஜராத்தை நேற்று தான் தோற்கடித்தது. அப்படிப்பட்ட வெற்றிக்கு சவாலான பிட்ச்சில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்து 2020இல் முதல் முறையாக பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன பின் கடைசிக்கட்ட போட்டிகளில் அறிமுகமாகி புள்ளி பட்டியில் கடைசி இடத்தை பிடிப்பதிலிருந்து சென்னையை காப்பாற்றிய அவர் 2021 சீசனில் 633 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அப்போது முதலே சென்னை பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த சீசனில் 564* ரன்கள் விளாசி ஃபைனலுக்கு தகுதி பெற முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அதை விட கடந்த வருடம் அறிமுகமாகி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று இந்த வருடமும் புள்ளி பட்டியலில் முதலிடம் படித்து எதிரணிகளை மிரட்டி வரும் குஜராத்துக்கு எதிராக 2022இல் முதல் முறையாக சென்னை விளையாடிய போட்டியில் இதர வீரர்கள் சொதப்பிய போதும் தனி ஒருவனாக அரை சதமடித்து 53 (49) ரன்கள் எடுத்த அவர் 20 ஓவரில் 133/5 ரன்களை எடுக்க உதவினார்.

- Advertisement -

இருப்பினும் அதை எளிதாக சேசிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் கடந்த வருடம் 2வது முறையாக சந்தித்த போதும் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அந்தப் போட்டியிலும் அட்டகாசமாக செயல்பட்ட ருதுராஜ் அரை சதமடித்து 73 (48) ரன்களை விளாசி போராடினார். இருப்பினும் சுமாராக செயல்பட்ட இதர பேட்ஸ்மேன்களில் 2வது அதிகபட்ச ஸ்கோராக ராயுடு 46 (31) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 169/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதை விட இந்த வருடம் 3வது முறையாக மோதிய போது முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு மீண்டும் அட்டகாசமாக மிரட்டிய அவர் தனி ஒருவனாக அரை சதமடித்து 92 (50) ரன்கள் விளாசி 20 ஓவர்களில் 178/7 ரன்கள் எடுக்க உதவினார். ஆனால் அதே போட்டியில் மீண்டும் சொதப்பிய இதர சென்னை பேட்ஸ்மேன்களில் 2வது அதிகபட்ச ஸ்கோராக மொய்ன் அலி 23 (17) மட்டுமே எடுத்தார். இறுதியில் அந்த இலக்கையும் அசால்டாக துரத்திய குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க:IPL 2023 : ஆல் டைம் சிறந்த ஆல் ரவுண்டராக – ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக ஜடேஜா படைத்த சூப்பர் சாதனை, விவரம் இதோ

அப்படி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமடித்தும் இதர வீரர்கள் சொதப்பியதால் வெற்றி காண முடியாத அவர் நேற்றைய போட்டியில் மீண்டும் மனம் தளராமல் போராடி தொடர்ந்து 4வது முயற்சியில் மீண்டும் அரை சதமடித்து வலுவான குஜராத்தை முதல் முறையாக சென்னை தோற்கடிக்க முக்கிய பங்காற்றி மாஸ் காடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement