விஜய் ஹசாரே கோப்பை : 3 ஆவது ஆட்டத்திலும் பொளந்து கட்டிய ருதுராஜ் கெய்க்வாட் – சி.எஸ்.கே வுக்கு லக்

Gaikwad-2
Advertisement

இந்தியாவில் தற்போது நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் மஹாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் 136 மற்றும் 154 ரன்கள் என அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி இருந்தார்.

gaikwad

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக 3 ஆவது சதத்தினை பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகளை இழந்து 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

- Advertisement -

அதன்பிறகு நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 50 ஓவர்களின் முடிவில் 291 ரன்களை குவித்தது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சதமடித்து ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்து 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

gaikwad 1

இந்த போட்டியிலும் மகாராஷ்டிரா அணியின் வெற்றிக்கு உதவியுள்ள அவரது ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படி அடுத்தடுத்து மூன்று சதங்களை விளாசியுள்ள இவரை சென்னை அணியானது இந்த ஆண்டு தக்க வைத்துள்ளதால் நிச்சயம் அவர் இந்த ஆண்டு சிஎஸ்கே அளித்த பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஒன்றல்ல..இரண்டல்ல..14 நோபால் வீசிய பென் ஸ்டோக்ஸ்..கண்டுகொள்ளாத அம்பயர் – நடந்தது என்ன?

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரின் எதிர்காலத்திலும் சிஎஸ்கே அணிக்காக இவர் மிகப் பெரிய வீரராக வலம் வருவார் என்பதால் இவரது சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement