ஒன்றல்ல..இரண்டல்ல..14 நோபால் வீசிய பென் ஸ்டோக்ஸ்..கண்டுகொள்ளாத அம்பயர் – நடந்தது என்ன?

Stokes
Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பன் மைதானத்தில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 147 ரன்களை குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆனது 425 ரன்களை குவித்தது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 297 ரன்களை குவிக்க நான்காவது இன்னிங்சில் 20 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி என்ற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

aus vs eng

இறுதியில் ஆஸ்திரேலிய அணியானது 6-வது ஓவரின் முதல் பந்தில் 1 விக்கெட் இழந்து 20 ரன்களை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் பந்து வீசிய இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசுகையில் ஒரே ஓவரில் 4 முறை நோபால் வீசியதாகவும் அதில் ஒரு முறை மட்டுமே அம்பயர் நோபால் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.

- Advertisement -

அதுமட்டுமின்றி அந்த முதல் இன்னிங்சில் மொத்தம் 14 முறை ஸ்டோக்ஸ் நோபால் வீசியதாக தற்போது ஆதாரங்களுடன் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த 14 நோபால்களில் ஒருமுறை மட்டுமே நோபால் வழங்கியுள்ளார். இது குறித்தான சர்ச்சை தற்போது அதிக அளவு வெளியாக ஆரம்பத்த நிலையில் ஏன் அம்பயர் நோபால் கொடுக்கவில்லை என்பதற்காக காரணம் வெளியாகியுள்ளது.

stokes 1

அதன்படி புதிய நடைமுறைகளின் படி நோபால்களை 3ஆவது அம்பயர் தான் பார்த்து சொல்ல வேண்டும். ஆனால் அன்றைய போட்டி நாளுக்கு முன்பு 3ஆவது அம்பயர் கவனிக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த சிஸ்டம் பெயிலியர் ஆனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்றாவது அம்பயரால் எந்த ஒரு முடிவையும் தொழில்நுட்பத்தை பார்த்து எடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக மைதானத்தில் இருந்த நடுவரே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டியதாயிற்று.

இதையும் படிங்க : தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட 3 திறமையான வீரர்கள் – லிஸ்ட் இதோ

மைதானத்தில் இருந்த அம்பயர் ஒருமுறை மட்டுமே நோபாலை கவனித்ததாகவும் மற்ற நோபால்களை கவனிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த இதயம் தற்போது சமூகவலைத்தளத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement