ஜடேஜா செட்டாகல, தோனிக்கு பின் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவர் தகுதியானர் – சேவாக் சூப்பர் கணிப்பு

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய இரு அணிகள் சேர்க்கப்பட்டதால் எஞ்சிய 8 அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டு 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான அணிகள் தங்களது முக்கிய வீரர்களை இழந்து தடுமாறினாலும் வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையுமே அதிக பாதிப்பை எதிர்கொண்டு தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறின. அந்த ஏலத்தில் கொல்கத்தா போன்ற அணிகள் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்தவர்களை பல கோடிகள் செலவழித்து வாங்கி தங்ககளின் புதிய கேப்டனாக நியமித்தனர்.

Faf

- Advertisement -

ஆனால் 4 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்க காத்திருந்த சென்னையின் கேப்டன் தோனி 40 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில்கொண்டு கேப்டன்சிப் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என நினைத்திருக்கிறார். கிரிக்கெட் களத்தில் எத்தனையோ சரியான முடிவுகளை எடுத்த அவர் அந்த விஷயத்தில் கையிலிருந்த தென்ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணிக்கே கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்ட டுபிளேஸிசை விட்டுவிட்டு ஜடேஜாவை தேர்வு செய்தார்.

செட்டாகாத ஜடேஜா:
இத்தனைக்கும் ஜடேஜாவுக்கு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லை என்று தெரிந்திருந்த தோனி அதனாலேயே அவருக்கு உறுதுணையாக செயல்பட்டார். ஆனாலும் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பே 4 தோல்விகளை பதிவு செய்த ஜடேஜா ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாபத்திற்கு உள்ளானார். அதைவிட பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என கேப்டன்ஷிப் அழுத்தத்தால் மொத்தமாக சொதப்பியதால் அந்தப் பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கியதுடன் தற்போது காயத்தால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.

Jadeja

மொத்தத்தில் சென்னையின் அடுத்த கேப்டனை சோதித்து பார்த்த தோனியின் முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் 40 வயதை கடந்த அவர் அடுத்த வருடம் கேப்டனாக செயல்பட்டாலும் கூட அதற்கடுத்த வருடம் நிச்சயமாக விளையாட முடியாது. எனவே இன்னும் ஒரு வருடத்திற்குள் அடுத்த கேப்டனை ஏலத்திலோ அல்லது அணியில் இருக்கும் இளம் வீரர்களில் சென்னை போன்ற மிகப்பெரிய ரசிகப் பட்டாளத்தை கொண்ட அணியை வழிநடத்த தகுதியானவரை கண்டறிய வேண்டிய சூழ்நிலை அவருக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே 30 வயதை கடந்த ஜடேஜா கேப்டனாக நியமித்ததில் தோல்வியே மிஞ்சியது.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
இந்நிலையில் தோனிக்கு அடுத்து சென்னையின் கேப்டனாக புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் சரியானவராக இருப்பார் என்று கணித்துள்ள வீரேந்திர சேவாக் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (ருதுராஜ்) மகாராஷ்டிராவின் கேப்டனாக இருக்கிறார். அவர் நடத்தையில் அமைதியானவராக உள்ளார். சதம் அடித்தாலும் சரி டக் அவுட்டானாலும் சரி அவர் ஒரே மாதிரியாக காணப்படுகிறார். அவர் சதமடித்தால் மகிழ்ச்சியாக இருப்பதையும் டக் அவுட்டானால் சோகமாக இருப்பதையும் பார்க்க முடிவதில்லை. மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் காணப்படும் அவர் கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவராக காட்சியளிக்கிறார்” என்று கூறினார்.

Sehwag

அதாவது இந்தியா மற்றும் சென்னையின் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி உலகக்கோப்பையை வென்றாலும் சதம் அடித்தாலும் டக் அவுட்டானாலும் தனது அணி 100 ரன்களுக்கு சுருண்டாலும் எப்போதும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக கூலாக இருப்பார் என்று அனைவருமே அறிவோம். அவரளவு இல்லையென்றாலும் ஏறக்குறைய அவரைப் போலவே பெரும்பாலான தருணங்களில் ஒரே மாதிரியாக காட்சியளிக்கும் ருதுராஜ் சென்னையின் கேப்டனாக தகுதியானவராக உள்ளார் என்று சேவாக் கூறுகிறார்.

- Advertisement -

மேலும் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிர அணிக்கு சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் அவரிடம் உள்ளது என்றும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ruturaj

கற்றுக்கொள்வார்:
“முதல்தர கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்துள்ளதால் ஒரு போட்டியை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை தத்துவம் அவருக்கு தெரியும். ஒரு சீசனில் யார் வேண்டுமானாலும் சிறப்பாக செயல்படலாம். ஆனால் 3 – 4 சீசன்கள் தொடர்ச்சியாக விளையாடும் அவர் தோனிக்கு பின் நீண்ட கால கேப்டனாக வரலாம். இது என்னுடைய சொந்த கருத்து என்றாலும் இறுதி முடிவு சிஎஸ்கேவின் கையில் உள்ளது. மிகவும் கூலாக இருக்கிறார் என்பதற்காகவே தோனியை அனைவரும் பாராட்டுகின்றனர்”

இதையும் படிங்க : ராயுடுவின் ரிட்டையர்மென்ட் பதிவு நீங்கதான் போட்டீங்களா? – சீனியர் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

“தோனி முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பவர். கூடவே சற்று அதிர்ஷ்டமும் அவருடன் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டம் என்பது தைரியமான முடிவுகளை எடுப்பவர்களுக்கு தாமாக கிடைக்கும். எனவே ருதுராஜ்க்கு அந்த தகுதிகள் உள்ளது என்று நினைக்கிறேன். அவருக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தோனியிடம் இருக்கும் தகுதிகள் அவரிடமும் உள்ளது” என்று பேசினார்.

Advertisement