17 இன்னிங்ஸ்களில் இதுவே முதல்முறை.. சேப்பாக்கத்தில் சறுக்கிய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன நடந்தது?

Ruturaj
- Advertisement -

கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை சிஎஸ்கே அணிக்காக 68 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 19 அரைசதம் என 2433 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு தோனி கேப்டன் பதிவிலிருந்து வெளியேறியதை அடுத்து சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

சேப்பாக்கத்தில் சறுக்கிய ருதுராஜ் கெய்க்வாட் :

அந்த வகையில் கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணியானது பிளேஆப் வாய்ப்பை தவறவிட்ட வேளையில் இம்முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்தது.

- Advertisement -

ஆனால் இரண்டாவதாக ஆர்.சி.பி அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் விளையாடிய சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை சந்தித்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியிடம் விழுந்து சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இப்படி அவர் டக் அவுட் ஆனதின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் ஒரு மோசமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதாவது இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக டக் அவுட்டாகியுள்ளார். மற்றபடி அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இப்படி அவர் முதல் முறையாக டக் அவுட்டானதற்கு அவருடைய பேட்டிங் ஆர்டர் மாற்றவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 24 பந்தில் 50.. தாய் நாட்டை புரட்டிய நியூஸிலாந்தின் பாக் வீரர் அப்பாஸ்.. பாண்டியாவை முந்தி உலக சாதனை

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே துவக்க வீரராக களம் இறங்கி அசத்தலாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு ராகுல் திரிப்பாதியை துவக்க வீரராக களமிறக்கி மூன்றாவது வீரராக விளையாடுவதாலே அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement