வீடியோ : பிரித்து மேய்ந்த ருதுராஜ் – கான்வே ஜோடி லக்னோவுக்கு எதிராக அதிரடி சாதனை, சென்னையின் பெரிய ஸ்கோர் இதோ

Ruturaj Conway
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து புதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஏராளமான தமிழக ரசிகர்கள் வந்து திருவிழா போல் மஞ்சள் உடையுடன் சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர்.

அந்த நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவாரத்திற்கு மத்தியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு நல்ல பார்மில் இருக்கும் ருதுராஜ் கைக்வாட் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை துவக்கி விரைவாக ரன்களை சேர்க்க அவருக்கு உறுதுணையாக டேவோன் கான்வே தனது பங்கிற்கு வேகமாக பேட்டிங் செய்தார். அந்த வகையில் பவர் பிளே ஓவர்களில் மார்க் வுட் போன்ற லக்னோ பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி 6 ஓவரில் 79 ரன்கள் விளாசி அதிரடியான தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

மிரட்டிய சிஎஸ்கே:
இவர்களை பிரிக்க முடியாமல் கேஎல் ராகுல் தடுமாறிய நிலையில் கொஞ்சமும் வேகத்தை குறைக்காத இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கைக்வாட் முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார். அதே வேகத்தில் 9.1 ஓவரிலேயே 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னைக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற சிறப்பான சாதனை படைத்தது. இதற்கு முன் லக்னோ அணிக்கு எதிராக எந்த அணியும் எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே கிடையாது.

அப்படி அதிரடியான தொடக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் ருதுராஜ் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (31) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே 5 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடிக்க முயற்சித்து டேவோன் கான்வே 47 (29) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த சிவம் துபே ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்திற்கு பின் 1 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 27 (16) ரன்களும் அவருடன் விளையாடிய மொய்ன் அலி 3 பவுண்டரியுடன் 19 (13) ரன்களும் எடுத்து தங்களது வேலையை செய்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க ரவிந்திர ஜடேஜாவும் 3 (6) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனாலும் மறுபுறம் அதிரடி காட்டிய அம்பத்தி ராயுடு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (14) ரன்கள் குவிக்க கடைசி ஓவரில் களமிறங்கிய தல தோனி மார்க் வுட் பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு வெறும் 3 பந்தில் 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவர்களில் சென்னை 217/7 ரன்களை குவிக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: IPL 2023 : சின்ன தல இல்லாம இதுதான் முதல்முறை. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரிதான நிகழ்வு – விவரம் இதோ

முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்த போட்டிகளில் சென்னை தோற்றதே கிடையாது. அந்த வகையில் இந்த போட்டியிலும் 217 ரன்கள் குவித்துள்ளதால் சென்னை சிறப்பாக பந்து வீசி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement